ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பிலிருந்து விலகிக் கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 24ம் திகதி குறித்து அறிவிக்கப்படும் என
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகிக்
கொண்டால், தேசிய சுதந்திர முன்னணி, மஹஜன ஐக்கிய முன்னணி, பிவித்துரு ஹெல
உறுமய போன்ற கட்சிகள் தனிமைப்படுத்தப்படக்கூடிய நிலை உருவாகும்.
எதிர்வரும் 24ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு
கூட உள்ளது. சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தில்
அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment