பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீளவும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வது கால தாமதமாகக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க இன்று, ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என
எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இந்த நிகழ்வு வார இறுதி வரையில் காலம் தாழ்த்தப்படலாம் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவானவர்கள் மற்றும் தேசியப் பட்டியல்
ஊடாக தெரிவு செய்யப்பட உள்ளவர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானி அறிவித்தல்
ஊடாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் வரையில் ரணில் பிரதமராக
பதவிப் பிரமாணம் செய்து கொள்வது கால தாமதமடையக் கூடும் என
தெரிவி;க்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானியில்
அறிவிக்கப்பட்டதன் பின்னர்ää ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம்
செய்து கொள்வார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment