எம்.வை.அமீர்-
கல்முனைத் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையான
தமிழர்களுக்கான உப தமிழ் பிரதேச செயலகமாக இருக்கும் பிரதேச செயலகத்தை நிரந்தர
தமிழ் பிரதேச செயலகமாக தரமுயர்த்த பாடுபடுவேன் என்று தமிழ் தேசியக்கூடமைப்பின்
அம்பாறை மாவட்ட வேட்பாளரும், முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான அரியநாயகம்
சந்திரநேரு சந்திரகாந்தன் (ரோகான்) தெரிவித்தார்.
2015-08-07 ல் கல்முனை நகரத்தில் கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயம்
ஒன்றைத் திறந்து வைத்தான் பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
தமிழ் மக்கள் எந்த சமூகத்தினதும் உரிமைகளை
தட்டிப்பறிக்க மாட்டார்கள் என்று தெரிவித்த அவர், இம்மக்களின் நியாயமான
கோரிக்கைகளுக்கு ஏனையவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்றும்
கேட்டுக்கொண்டார். இரண்டறக்கலந்துள்ள தமிழர்களும் முஸ்லிம்களும்
விட்டுக்கொடுப்போடு வாழாது விடுவோமானால் பேரினவாதிகள் எங்களுக்கிடையே இருக்கும்
பிளவுகளைப் பயன்படுத்தி அவர்களது இலக்கை அடைய முனைவார்கள் என்று தெரிவித்த அவர் காலம்காலமாக அம்பாறை மாவட்டத்திலும் ஏனைய
பிரதேசங்களிலும் ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழும் தமிழர்களை, சிலர் தங்களது
அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காகவும் இனங்களுக்கிடையே பிரிவினையை
ஏற்படுத்துவதற்காகவும் வரிந்துகட்டிக் கொண்டு செயற்படுவதாகவும் அவர்கள் விடயத்தில்
மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக்கூடமைப்பின் அம்பாறை மாவட்ட
வேட்பாளரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான அரியநாயகம் சந்திரநேரு சந்திரகாந்தன்
(ரோகான்) தெரிவித்தார்.
ஒரு பக்கத்தில் நூதன காணி அபகரிப்பிலும்
மறுபக்கத்தில் சிலரின் அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காக பாரம்பரியமாக வாழ்ந்துவரும்
தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யாது விட்டிருப்பதுடன் தமிழர் பிரதேசங்களின்
எல்லைகளிலும் ஆக்கிரமிப்புக்களை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
நடக்கவிருக்கின்ற தேர்தலுக்காக ஐக்கியதேசியக்
கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் அபிலாசைகளைக்
கேளாது கல்முனை அபிவிருத்தி சம்மந்தமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்,
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சரியான முறையில்
அணுகக்கூடிய ஒருவரை தமிழ் மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட
முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன், கடந்தகாலங்களில் தமிழ் மக்கள்
எதிர்நோக்கிய பாரிய நெருக்குதல்களுக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தான் குரல்கொடுத்ததாகவும்
தெரிவித்தார்.
வென்றாகவேண்டும், தமிழ் ஒன்றாக வேண்டும் என்ற
தனது தந்தையின் தாரக மந்திரத்தின் காரணமாக துப்பாக்கி ரவைகளை பரிசாகப்பெற்ற எனது
தந்தை சந்திரநேருவின் வாரிசான தான், அவரது வழியில் தமிழ் பேசும் மக்களின்
உரிமைகளுக்காகப் பேராடுவேன் என்றும் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வேட்பாளர் சந்திரகாந்தன்,
தமிழ் மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளை பணத்துக்கோ அல்லது ஏனைய பொருட்களுக்குமோ
தாரைவார்த்துவிடாது கூடமைப்பின் சின்னமான வீட்டுக்கும் தான் தகுதியானவன் என
நீங்கள் கருதினால் தனக்கும் வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
மற்றுமொரு வேட்பாளரனா முருகேசு நடேசனும் தமிழர்கள் தமிழ் கூடமைப்புக்கு தமிழ்
வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.




0 comments:
Post a Comment