எம்.எஸ்.
அம்பாரை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறையும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரையும் நாம் மக்கள் மத்தியில் மேற்கொண்ட கணீப்பீட்டின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுமார் 45ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளுமென்று எதிர் பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் நிறுத்தப்பட்டுள்ள 10 வேட்பாளர்களுள் அரியேந்திர நாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
இவர் சுமார் 30ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் அரசியலுக்குள் நுளைவதற்கு முன்னர் அதாவது வேட்பாளராக தெரிவு செய்யப்படும் வரைக்கும் அரசியல் நோக்கங்களின்றி தமிழ் மக்களுக்கு அளப்பரிய சேவைகளை தமது சொந்தப் பணத்தில் செய்து வந்துள்ளதனை தமிழ் மக்கள் நன்றியுடன் பார்க்கின்றார்கள். இவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் எங்களுக்கும் இன்னும் நிறைய சேவைகளை செய்வார் என்று தாங்கள் நம்புவதாக அம்பாரை மாவட்டத்தில் தமிழர்கள் பலரும் எம்மிடம் தெரிவித்தார்கள்.
இதே வேளை, தாம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் தனக்கு கிடைக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கான ஊதியத்தை ஏழை தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவவிருப்பதாக தெரிவித்துள்ளார். இவரின் இம்முடிவு தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோடிஸ்வரனுக்கு அடுத்த படியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலைச் செல்வன் உள்ளார். இவர் சுமார் 20ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெறுவார் என எதிர் பார்க்கப்படுகின்றது

0 comments:
Post a Comment