• Latest News

    August 30, 2015

    மட்டக்களப்பு மாவட்டத்துக்கான சுற்றுலா மையம் திறந்து வைக்கப்பட்டது

    மட்டக்களப்பு மாவட்டத்துக்கான சுற்றுலா மையம் மாவட்ட மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நேற்று மாலை (29) மட்டக்களப்பு நீருற்றுப் பூங்கா வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் வரவேற்கப்படுவதையும், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சுற்றுலா மையத்தின் பெயர் கல்லின் திரை மற்றும் சுற்றுலா மையத்தின் கட்டிடத்தை திறந்து வைப்பதையும், அருகில் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ்,  கொயிக்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதி பணிப்பாளர் அஜின்ஹேன், ஆசியமன்றத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதிகளான டினேஷ் டி சில்வா, விக்ரம நாயக்க மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்எம்.சலீம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.சார்ள்ஸ், சுற்றுலாக் கைத்தொழில் சம்மேளணத் தலைவர் ஏ.எம்.ஜௌபர் ஆகியோர் நிற்பதையும், கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டக்களப்பு மாவட்டத்துக்கான சுற்றுலா மையம் திறந்து வைக்கப்பட்டது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top