பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஆவாரான், குஜ்தார் பகுதியில்
கடந்த 24-ந்தேதி பயங்கர பூகம்பம் தாக்கியதில் 350 பேர் இறந்தனர். தற்போது
சாவு எண்ணிக்கை 357 ஆக உயர்ந்திருப்பதாக பலுசிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது.
இதில் ஆவாரான் பகுதியில் மட்டும் 300 பேர் இறந்தனர். மேலும் 620 பேருக்கு
காயம் ஏற்பட்டது. மீட்பு நடவடிக்கையில் 1,000 ராணுவத்தினரும், 10
ஹெலி காப்டர்களும் ஈடுபட்டு வருகிறது.
என்றாலும் இந்த பூகம்பம் தாக்கிய பகுதியில் சுமார் 1 லட்சம் மக்கள் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் இன்றி வெட்டவெளியிலேயே தங்கியிருக்கிறார்கள். இவர்களை மீட்டு அழைத்து வர போதிய ஹெலிகாப்டர்கள் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் கூடுதலாக நவீன சி-130 ரக ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்க பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். பூகம்பம் பாதித்த பகுதிக்கு 2,600 கூடாரங்கள் மற்றும் உணவு பொட்டலங்கள், குடிநீர் பாக்கெட்டுகளை அனுப்பி மீட்பு நடவடிக்கை இரவு, பகலாக நடக்கிறது என்று பலுசிஸ்தான் அதிகாரிகள் கூறினர்.

0 comments:
Post a Comment