• Latest News

    August 21, 2015

    கருநாகப்பாம்பின் ரத்தத்தை குடித்து பயிற்சியை நிறைவு செய்த அமெரிக்க ராணுவ வீராங்கனை

    யுத்தகளத்தில் முன்னணியில் நின்று போர்புரிவதில் ஆண்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கி வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்தது.

    இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 381 ஆண்கள் மற்றும் 19 பெண்களுடன், ராணுவ ரேஞ்ஜர்களுக்கான தலைமைப் பயிற்சி ப்ளோரிடா மாகாணத்தில் தொடங்கியது. இந்த பயிற்சி தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது.

    இந்த பயிற்சியின் போது, வன விலங்குகள் மற்றும் அதிக நச்சுத் தன்மையுள்ள பாம்புகளை அடித்துக் கொல்வது, பேரிடரில் சிக்கித் தவிக்கும் ராணுவ வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, காடுகளில் மறைந்திருந்தபடி பல நாட்கள் உயிர் வாழ்வது எப்படி? என்பன உள்ளிட்ட பல்வேறு போர் பயிற்சி முறைகள் பயிற்றுவிக்கப்பட்டன.

    49 புஷ்-அப், 59 சிட்-அப், 6 சின்-அப் இவ்வளவையும் செய்து விட்டு 8 கிலோ மீட்டர் தூரம் ஓடுவதுதான் இந்த பயிற்சியின் முக்கிய அம்சமே இத்தனையையும் வெறும் 40 நிமிடங்களுக்குள் செய்து முடித்தாக வேண்டும் என்றால் பயிற்சி எவ்வளவு கடுமையாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இது தவிர, 3 மணி நேரத்தில் 19 கிலோ மீட்டர் நடப்பது, மலையேற்றப் பயிற்சி, நீச்சல் பயிற்சி என்று ஒவ்வொன்றும் ஒருவரை சிறந்த ராணுவ வீரராக உருமாற்றக்கூடியது.

    இந்த பயிற்சியின் ஒரு கட்டமாக மிகக் கடுமையான நச்சுத் தன்மையுள்ள கருநாகங்களை வேட்டையாடும் கலை பற்றி கற்றுத் தரப்பட்டது. மேலும், உணவு ஏதும் கிடைக்காத நிலையில், ஒரு கருநாகத்தின் ரத்தத்தை குடித்து,  உயிரை காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    தாய்லாந்து காட்டுப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களிடையே கருநாகத்தின் ரத்தத்தை குடிக்கும் வழக்கம் நிலவி வருகிறது. பாலுணர்வு எழுச்சியை தூண்டுவதில் முதன்மை மருந்தாக கருதப்படும் கருநாகத்தின் ரத்தம் கிழக்கு ஆசியா பகுதியில் உள்ள பல நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது.

    இந்நிலையில், பயிற்சியின் ஒருபகுதியாக பிடிபட்ட கருநாகத்தின் ரத்தத்தை குடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். வீரர்கள் பலர் இதற்கு மறுப்பு தெரிவித்த் நிலையில் ஒரு வீராங்கனை மட்டும் துணிச்சலுடன் கருநாகத்தை கொன்று வெட்டப்பட்ட பாம்பின் தலைப்பகுதியை வாய்க்குள் வைத்து ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தார். இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

    இந்த கடும் பயிற்சியில் 2 பெண்கள் உட்பட 94 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.  இவர்கள் பயிற்சியில் தேர்ச்சி பெற்றதற்கான விழா வருகிற வெள்ளிக்கிழமை போர்ட் பென்னிங் ராணுவ மையத்தில் நடைபெறுகிறது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கருநாகப்பாம்பின் ரத்தத்தை குடித்து பயிற்சியை நிறைவு செய்த அமெரிக்க ராணுவ வீராங்கனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top