• Latest News

    August 14, 2015

    சிராஸ் மீராசாஹிப் பிரச்சார நடவடிக்கைகளில்

























    (அகமட் எஸ். முகைடீன்)
    சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு கல்முனை முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை நேற்று  (13) மாலை மேற்கொண்டார்.

    இதன்போது சாய்ந்தமருது வர்த்தகர்கள் மாலை அணிவித்து உச்சாகத்துடன் வரவேற்றதோடு குளிர்பானங்களும் வழங்கி கௌரவித்தனர். 99 வீதமான வர்தகர்கள் தங்களது ஆதரவினை கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிபுக்கு வழங்குவதாக தெரிவித்தனர்.

    மேற்படி வர்த்தகர்கள் வழங்கிய ஆதரவினை சகிக்க முடியாத சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் சிராஸ் மீராசாஹிப் 25இற்கும் மேற்பட்ட நபர்களுடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதாக கல்முனை பொலிசாருக்கு பல முறை அழைப்பினை ஏற்படுத்தி தெரிவித்ததன் விளைவாய் பொலிசார் மேற்படி பிரச்சார நடவடிக்கையினை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். இருந்தபோதிலும் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை 20 இற்கும் குறைவானவர்கள் எனக் கூறி குறித்த பிரச்சார நடவடிக்கை தொடரப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிராஸ் மீராசாஹிப் பிரச்சார நடவடிக்கைகளில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top