• Latest News

    August 14, 2015

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியை ஏற்படுத்திய பெருமை தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சாரும். ஐ.தே.க. வேட்பாளர் பீ.தயாரத்தன.

    ( றிசான் )
    நாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியை ஏற்படுத்திய பெருமை இந்நாட்டு தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தினரைச் சாரும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அராஜக ஆட்சியை முறியடித்து சரித்திரம் படைத்த நிகழ்வு இலங்கையின் வரலாற்றில் நிச்சயம் தடம்பதிக்கும் என்று திகாமடுல்ல மாவட்ட ஐ.தே.க. வேட்பாளர் பீ.தயாரத்ன தெரிவித்தார்.

    அட்டாளைச்சேனையில் வேட்பாளர் பீ.தயாரத்தனவுக்கு ஆதரவு தேடும் தேர்தல் பிரசாரக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார். ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்துச் சபை அக்கரைப்பற்றுச் சாலை முகாமையாளர் யு.எல்.சம்சுடீன் தலைமையில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

    இதன்போது, ஐ.தே.க.கரையோரப் பிரதேச அமைப்பாளர் ஐ.எல்.இபாஸ் முகம்மட், அக்கரைப்பற்று அமைப்பாளர் எம்.ஐ.ஏ.ஆர்.புகாரி, கல்முனை பிரதேச ஐ.தே.க.முக்கியஸ்த்தர் எம்.எம்.ஜெமீல், வேட்பாளரின் இணைப்பாளர் எம்.சீ.கால்டீன், ஓய்வுபெற்ற அதிபர் யு.எம்.சகீது, உட்பட முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கு வருகைதந்த வேட்பாளர் பீ.தயாரத்ன ஆதரவாளர்களினால் வரவேற்கப்;பட்டதுடன், ஆதரவாளர் எம்.எச்.எம்.கியாஸினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

    வேட்பாளர் பீ.தயாரத்ன மேலும் கூறுகையில், கடந்த ஜனவரி 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சியில் இந்நாட்டு மக்கள் இன, மத பேதங்களின்;றி ஒற்றுமையாக வாழ்ந்துவருகின்றனர். தற்போது பள்ளிவாயல்கள், கோயில்கள் உடைக்கப்படுவதுமில்லை. மக்கள் தாக்கப்படுவதுமில்லை. வேண்டிய நேரம், தேவையான இடத்திற்கு பயணிக்கக் கூடியதாக உள்ளது. இதுவே எமக்கு தொடர்ந்தும் கிடைக்கவேண்டும்.

    திகாமடுல்ல மாவட்டத்தில் கடந்த 38 வருட அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ள எனக்கு தேர்தலின் போது, கணிசமானளவு தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் வாக்களித்து வருகின்றமை வரலாறாகும். நான், இனம், மதம், மொழி, கட்சி, பிரதேசம் என்று பேதம் பார்ப்பதில்லை. இதை என்னுடனுள்ளவர்கள் அறிவர். எந்தத் தேவைக்காக வருகின்றார் என்பதை மாத்திரமே பார்த்து பணியாற்றி வருகின்றேன். எனது தொடர் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

    ஜனாதிபதி மைத்திhபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் நாடு அபிவிருத்தி காண வேண்டும். அதற்கான சந்தர்ப்பமொன்று ஆகஸ்ட் 17ம் திகதி கிடைத்துள்ளது. அப்போது நாம் ஒற்றுமையாக யானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். நாங்கள் ஏற்படுத்திய நல்லாட்சி தொடர  பங்களிப்பு நல்க வேண்டும்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியை ஏற்படுத்திய பெருமை தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சாரும். ஐ.தே.க. வேட்பாளர் பீ.தயாரத்தன. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top