சஹாப்தீன் -
பேராதனை பல்கலைக் கழகத்தின் அரசியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.எம்.இஃஜாஸ் எழுதிய "சமகால அரசியல் எண்ணக்கருக்கள்" எனும் நூல் வெளியீடு நாளை நிந்தவூர் பிரதேச சபையின் புதிய கட்டிடத் தொகுதியிலுள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
பேராதனை பல்கலைக் கழகத்தின் அரசியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.எம்.இஃஜாஸ் எழுதிய "சமகால அரசியல் எண்ணக்கருக்கள்" எனும் நூல் வெளியீடு நாளை நிந்தவூர் பிரதேச சபையின் புதிய கட்டிடத் தொகுதியிலுள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இஃஜாஸ், பேராதனை பல்கலைக் கழகத்தின் முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையில் தனது ஆரம்ப கல்வி முதல் உயர்தரம் வரை கற்றுக்கொண்ட இவர், 1996ம் ஆண்டு பேராதனைப் பலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அங்கு அரசில்துறையில் சிறப்புப் பட்டத்தை கற்றுக் கொண்டதோடு, அப்பல்கலைக் கழகத்தில் 2003ஆம் ஆண்டு முதல் அரசியல்துறை விரிவுரையாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். 2008ஆம் ஆண்டு முதல் இப்பலைக்கழகத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
மேலும், டோக்கியோ பல்கலைக் கழகத்தில் துறைசார்ந் முதுமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
அத்தோடு, கொழும்பு மாலபே கடல்சார் கற்கைகள் பல்கலைக் கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக் கழகம் ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
ஆக்கங்களினூடாக அறிவைப் பரப்பும் அவரது முயற்சியின் தொடர்ச்சியாக "சமகால அரசியல் எண்ணக்கருக்கள்" எனும் நூல் இடம்பெறுகின்றது. ஏலவே, 2003 மற்றும் 2012களில் 'இலங்கை இனப் பரச்சினை தீர்வு யோசனைகள்' 'சுவிற்சலாந்து அரசாங்க முறை' ஆகிய நூல்களை தொகுத்து எழுதியுள்ளார்.
சமகால அரசியல் எண்ணக் கருக்கள் எனும் தலைப்பை தாங்கியுள்ள இந்நூல் அரசியல் விஞ்ஞானப் பாடத்துறையில் அண்மைக் காலங்ளில் இடம்பிடித்துள்ள எண்ணக்கருக்கள் மற்றும் கருப் பொருட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இது பல்கலைக் கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அரசறிவயலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திமன்றி பொதுவாக அரசியலில் நாட்டமும் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதிக பயன்மிக்கதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment