(சுலைமான் றாபி)
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது கனவில் மூன்று முறை ஜனாதிபதி மைத்திரியை
கனவில் காணுகின்றார். அதில் ஒவ்வொரு கனவிலும் தான் தேர்தலில் போட்டியிட
வேண்டும் என்பதனையும், மாவட்டத்தில் தலைவராக இருக்க வேண்டும் என்பதனையும்
மற்றும் பிரதம மந்திரியாக இருக்கவேண்டும் என்கின்ற ஆசைக்கனவுகளைக்
காணுகின்றார். இந்தக் கனவுகள் எல்லாம் நேற்றைய தினம் ஜனாதிபதி
மைத்திரிபாலவினால் அனுப்பப்பட்ட கடிதத்துடன் கலைந்துவிட்டது என மத்திய
மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி நேற்று (13) நிந்தவூரில் இடம்பெற்ற
ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு
உரைநிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில் :
இம்முறை
இந்ததேர்தலில் ஐ.தே.கட்சிக்கு 110 ஆசனங்களும், ஐ.ம.சு.முன்னணி 60 தொடக்கம்
70 ஆசனங்களும், ஜே.வி.பி. 15 ஆசனங்களும், த.வி.கூட்டணி 15ஆசனங்களும் ஏனைய
கட்சிகள் சிறு சிறு ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளும். இதில் எதிர்வரும் 18ம்
திகதி ஜனாதிபதி அவர்கள் ஐ.தே.கட்சியை ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார்.
இதில் மஹிந்த அணியைச்சேர்ந்த 10 பேர் மீதமாக இருக்க ஏனையோர்கள் தேசிய
அரசாங்கம் அமைக்க மைத்திரியின் காலில் வந்து விழுவார்கள். இதன் பிறகு
மஹிந்த ராஜபக்சவும், உதயன் கம்பன்வில போன்றோர்களும் சிறையில் அடைக்கப்பட்டு
03 வேளை உணவு உண்பார்கள்.
கடந்த கால வரலாற்றில்
04 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் இந்த நாட்டை ஆட்சி செய்த போது
அவர்களால் கள்ளன் என்கின்ற பட்டத்தினை சுமக்க முடியாதிருந்தது. ஆனால் கடந்த
முறை தோல்வியுற்ற ஜனாதிபதியினதும் அவர் குடும்பத்தினாலும் கள்வர்கள்
என்கின்ற பெயரினை இலகுவாக சுமக்க முடிந்துள்ளது. இதற்கு உதாரணமாக தற்போதய
பிரதமரின் ஆட்சிக் காலத்தில் மஹிந்தவிற்கு எதிராக 7000 முறைப்பாடுகள்
கிடைக்கப் பெற்றுள்ளன.
மேலும் ரக்பி வீரர் வசீம்
தாஜுதீனின் கொலைச்சம்பவத்தில் கொலைச்சூத்திர தாரிகள் ஓரளவிற்கு அடையாளம்
காணப் பட்டுள்ள வேளை நாட்டில் இனவாதத்தினை தூண்டிவிட்டு நாட்டை சின்னா
பின்னப் படுத்துவதற்கு திட்டம் தீட்டியுள்ளனர்.
83
மில்லியன் சுனாமி நிதிகளை கொள்ளையடித்த மகிந்தவை காப்பாற்றிய முன்னாள்
பிரதம நீதியரசர் சரத் என் சில்வா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு
மீண்டும் அவருடனே சேர்ந்துள்ளதால் நீதியும் புதைக்கப்பட்டுள்ளது.
இன்னாட்டில் நீதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதென்றால் ஐ.தே.கட்சியின்
ஆட்சிக்காலங்கலிலே வாழ முடியும். எனவே ஜனவரி 08ம் திகதி பெற்றுக் கொண்ட
வெற்றியை தொடர்ந்தும் காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

0 comments:
Post a Comment