யாழ்.
புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை
ஆதரித்து நேற்றுமாலை பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல்
பிரசாரக் கூட்டத்தில் வட மாகாணசபை உறுப்பினரும், தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்,
மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வலிமேற்கு சமூக மேம்பாட்டுக் கழக
ஆலோசகர் டேவிட், முன்னாள் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன்,
முன்னைநாள் சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர் கேதஸ்வரநாதன் ஆகியோர் கலந்து
கொண்டு உரையாற்றியிருந்தனர்.
மாகாணசபை
உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் இங்கு உரையாற்றும் போது, தமிழ் தேசியக்
கூட்டமைப்புக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களித்து தமிழ் தேசியக்
கூட்டமைப்பை அமோகமாக வெற்றியடையச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
இதேவேளை,
லங்காஸ்ரீ குழுமத்தின் "ஜே.வி.பிநியூஸ்" போன்ற மூன்றாம்தர இணையத்தளங்கள்;
சித்தார்த்தன் மீதான ஒரு காழ்ப்புணர்ச்சியில் சித்தார்த்தன்
போன்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென்று அனந்தி சசிதரன் கேட்டுக் கொண்டதாக
ஒரு பொய்யான பரப்புரையினை அண்மையில் மேற்கொண்டிருந்தன.
ஆயினும்
இந்தியாவிற்கு சென்றிருந்த அனந்தி சசிதரன் இரு தினங்களுக்கு முன்னரே
இலங்கை திரும்பியிருந்தார். இலங்கை திரும்பியதும் மேற்படி செய்தியை அறிந்து
அதற்குப் மறுப்புத் தெரிவிக்கும் முகமாக புன்னாலைக்கட்டுவனில்
சித்தார்த்தன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில்
கலந்து கொண்டு தமிழ் தேசியத்தை வலியுறுத்திப் பேசியதோடு, தமிழ் தேசியக்
கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டுமெனவும் கேட்டுக்
கொண்டார்.




0 comments:
Post a Comment