• Latest News

    August 13, 2015

    இலங்கை முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் அரசியல் ஆய்வு மையம் (MSEPRO) அமைப்பினால் ஆய்வு செய்யப்பட்ட நல்லாட்சி தேசிய அரசியலில், சிறுபான்மை முஸ்லிம் பிரதிநிதித்துவமும் மற்றும் பொதுத் தேர்தல் - 2015

    தேர்தல் தொடர்பான இறுதி ஆய்வுக் கட்டுரை
    பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி ஆய்வின் முடிவுகள
     பைஷல் இஸ்மாயில் -
    சமகால அரசியல் புதிய நல்லாட்சிக்கான பொதுத் தேர்தல் - 2015 சம்பந்தமாக இலங்கை வாழ் சகல பிரதேசங்களிலும் புதிய அரசியல் சீர் திருத்தமும், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் சம்பந்தமாக எமது மையம் மேற்கொண்டுள்ள இரண்டாம் (02) கட்ட ஆய்வுகளின்; அடிப்படையில், நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றிலேயே குறிப்பாக முஸ்லிம் அரசியல் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் குறிப்பாக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமையப்போகும் புதிய அரசியல் கலாச்சாரத்துக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான புதிய பரிமானத்தை தோற்றுவிப்பதுடன் புதிய பாராளுமன்றத்தில் இடம்பெரும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் பாரிய தாக்கம் செலுத்துவுள்ளது.

    இந்நிலையில், கிழக்கு மாகாண அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் தெரிவு செய்யப்படுகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி ஏற்படுவதுடன், இவ்வீழ்ச்சியினால் சிறுபான்மை சமூகத்தினரின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையின் தாக்கம் காரணமாக பெரும்பான்மை இனத்தவரின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் பாரிய தாக்கம் (அதிகரிப்பு) செலுத்துத்தவுள்ளது.

    தற்போதைய சமகால அரசியல் நோக்கை முன்வைத்து நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவதும் இறுதியுமான ஆய்வுகளின் அடிப்படையில்,


    கட்சிகள்
    19.07.2015 ஆம் திகதி ஆய்வின்படி கட்சிகள் பெற்றுக்கொள்ளும் ஆசணங்கள்
    12.08.2015 ஆய்வின்படி கட்சிகள் பெற்றுக்கொள்ளும் ஆசணங்கள்
    UNP
    110
    105
    UPFA
    73
    75
    SLMC + UNP
    06
    05
    SLMC
    02
    01
    ACMC
    00
    01
    ACMC + UNP
    03
    02
    JVP
    07
    13
    TNA
    22
    20
    பொன்சேகா அணி
    01
    02
    BBS
    பொதுபலசேனா அணி
    01
    01
    மொத்தம்
    225
    225

    மேற்குறிப்பிடப்பட்ட கட்சிகள் இந்த அடிப்படையில் தங்கள் ஆசணங்களை பெற்றுக்கொள்ளவுள்ளது.

    அதிகூடிய மக்கள் பிரதிநிதிகளைப் பெரும் கட்சியாக UNP கூட்டணி பெற்று ஆட்சியமைக்கும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.

    இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கம் ஜனவரி 9 ஆம் திகதி ஆட்சியமைத்த காலமுதல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்றுவரை நடாத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் அதிகமுள்ளன.
    அம்பாறை மாவட்டம்:- 19.07.2015 ஆம் திகதி ஆய்வின்படி


    கட்சிகள்

    முஸ்லிம்;

    தமிழ்

    சிங்களம்

    மொத்தம்

    ஆசனம்;
    UNP+SLMC
    55,000 – 60,000
    1,500
    45,000 – 50,000
    101,500 – 112,000
    04
    UPFA
    18,000 - 20,000
    1,000
    40,000 - 45,000
    60,000 – 65,000
    02
    TNA

    35,000 – 40,000

    35,000 – 40,000
    01
    ACMC
    15000 - 20000
    200
    100
    21,000
    ??
    தற்போது அம்பாறை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் பிரச்சார நடவடிக்கைகளின் மூலம் மக்கள் மத்தியில் வைக்கப்படுகின்ற கருத்துக்களினால் மக்களை ஏமாற்ற எடுக்கப்பட்டிருக்கின்ற நடவடிக்கை காரணமாகவும் மக்கள் மத்தியில் இதுவரை காலமும் இருந்த நம்பிக்கை, ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டு பல தலைமைத்துவங்கள் பரவலாக்கப்பட்டு பிரதேச வாதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற அரசியல் நகர்வுகள் காரணமாக தெரிவு செய்யப்படுகின்ற முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் என்றுமில்லாதளவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி பெரும்பான்மை சமுகத்தின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பை ஏற்படுத்த காரணமாக அமைகின்றன.

    அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமங்களில் ஆராயப்பட்ட ஆய்வின் அடிப்படையில், பின்வரும் தமிழ், முஸ்லிம், சிங்கள கட்சிகள் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையை எதிர்வு கூறக் கூடியதாகவுள்ளது. இது மாவட்டத்தில் அளிக்கப்படும் வாக்குளின் வீதம் சராசரி 70 வீதத்துக்கு உட்படுத்தப்பட்டு இத்தரவு தரப்பட்டுள்ளது.

    கிராம ரீதியாக அளிக்கப்படுகின்ற முஸ்லிம் வாக்குகளின் வீகிதாசாரம் பின்வருமாறு,

    gpuNjrk;
    SLMC (UNP)
    ACMC
    UPFA
    nghj;Jtpy;
    40%
    40%
    20%
    mf;fiug;gw;W
    15%
    10%
    75%
    ml;lhisr;Nrid
    60%
    25%
    15%
    ghyKid
    75%
    15%
    10%
    xYtpy;
    80%
    15%
    05%
    epe;jT+u;
    65%
    25%
    10%
    rha;e;jkUJ
    40%
    50%
    10%
    fy;Kid
    50%
    40%
    10%
    kUjKid
    60%
    35%
    05%
    ew;gl;bKid
    60%
    30%
    10%
    rk;khe;Jiw
    50%
    45%
    05%
    ,wf;fhkk;
    60%
    30%
    10%
    tupg;gj;jhQ;Nrid
    60%
    25%
    15%

    mk;ghiw khtl;lk;:- 12.08.2015 ,d;iwa Ma;tpd;gb


    fl;rpfs;

    K];ypk;

    jkpo;

    rpq;fsk;

    nkhj;jk;

    Mrzq;fs;

    SLMC + UNP
    53000 - 56000
    1000 - 2000
    50000  55000
    115000
    03 (0201)
    UPFA
    20000 - 22000
    1000
    50000  55000
    80000
    02 (0200)
    ACMC
    25000 - 26000
    500
    500
    26000
    01 rpyNtis fpilf;fyhk;. 
    TNA
    300
    40000 - 42000
    00
    42000
    01

    இம்முறை அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய சிங்கள பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டார்கள் என்ற வரலாறு முதற்தடவையாக இலங்கை வரலாற்றில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாக அமையவுள்ளது. இது இம்மாவட்ட சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியல் பொருளாதாரம், இருப்பு போன்றவற்றை பாதிக்கும் பாரிய அபாயத்தை தொற்றுவித்து தேசிய அரசியலில் தாக்கத்தையும் தோற்றுவிக்கும்.

    மு.காவின் தலைமைத்துவம் சிறந்த ஆழுமைமிக்கதாக பலம் பெற்று பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும் சிறந்த முடிவின் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் வெற்றி ஐக்கிய தேசிய முன்னணியை வெற்றியடையச் செய்திருந்தாலும்  கட்சியின் வெளிப்படையான அரசியல் பங்கீடுகள் கிராமங்களுக்கு பரவலாக்கப்படவேண்டிய தேவையை வெளிக்காட்டுகின்றது.

    நடைபெறவிருக்கும் இந்த பொதுத்தேர்தல் முடிவுகள் மூலம் சிறுபான்மை சமுகத்துக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எமது ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. அத்துடன் புதிய சீர் திருத்தங்களும் மாற்றங்களும் இளம் திறமைமிக்க தியாக சிந்தனையுள்ள கட்சியின் கட்டுக்கோப்புக்கும் சமூக கரிசனையுள்ள இத்தேர்தலானது சிறுபான்மை இன கட்சிகளுக்கு குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு பெரும் சவாலாகவும் இத்தேர்தல் அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

    புதிதாக களம் இறங்கப்பட்ட அகில இலங்கை காங்கிரஸின் வருகையை மக்கள் பூரணமாக விளங்க முடியாத தடுமாற்றத்தின் காரணமாக இக்கட்சியினால் களம் இறக்கப்பட்ட வேட்பாளர்கள் காரணமாக இக்கட்சி இம்மாவட்டத்தில் சற்று தனது இருக்கையை முதன்மைப்படுத்த பாரிய முயற்சியில் ஈடுபடுவதன் காரணமாகவும் மு.காவின் 3 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்ற அத்தெரிவை சற்று பின் நகர்த்துவதற்கு காரணமாக அமைகின்றது.

    அத்துடன் பெரும்பான்மை சமுகத்தின் பிரதிநிதிகளின் தெரிவில்கூட அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கு அகில இலங்கை காங்கிரஸின் வருகையும் பொது ஜன ஐக்கிய முன்னணியின் கூட்டில் களமிறக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் வேட்பாளர்கள் காரணமாகவும் முஸ்லிம்களின் ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டு பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறையும் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

    நடைபெறவிருக்கும் சிறுபான்மை சமூகமாகிய தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் கட்சியான கூட்டணியின் சிந்தனை மாற்றத்தின் காரணமாகவும் ஒற்றுமையின் காரணமாகவும் இத்தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

    எனவே, தேசிய அரசியலா? அல்லது பிராந்திய அரசியலா? என்ற ரீதியில் இத்தேர்தல் அமையப்போகின்றது என்பதை எதிர்வரும் பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் தாக்கத்தை செலுத்தும் ஒரு சவால் மிக்க தேர்தலாகவும் இத்தேர்தல் அமையும்.

    அத்துடன் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் ஆசணங்களின் எண்ணிக்கையில் தெரிவு செய்யப்படும் ஆசணம் தேசிய அரசியலில் ஒரு பாதிப்பைச் செலுத்தி முஸ்லிம்களின் தனித்துவத்தை பாதிக்கும் அபாயமும் ஏற்படலாம்.

    குறிப்பாக ருPகுயு அரசியலில் கடந்தகால கசப்பு, இன சுத்திகரிப்பு அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றம் புதிய அரசியல் நல்லாட்சி அரச சிந்தனை தற்போது ஜனாதிபதி செயற்படும் விதம் என்பனவற்றை கருத்திற்கொண்டு மாற்றுக் கட்சிகளுக்கு அளிக்கப்படுகின்ற ருPகுயு வாக்குகள் மற்றும் ருNP (ருNகு) பொரும்பான்மை சமுகத்துக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பலத்துக்கு ஒரு சவாலாகவும், முஸ்லிம்களின் அரசியல் சக்தியை பலயீனப்படுத்துவதாகவும் அமையலாம் என மெஸ்பரோ அமைப்பின் இறுதி ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் அரசியல் ஆய்வு மையம் (MSEPRO) அமைப்பினால் ஆய்வு செய்யப்பட்ட நல்லாட்சி தேசிய அரசியலில், சிறுபான்மை முஸ்லிம் பிரதிநிதித்துவமும் மற்றும் பொதுத் தேர்தல் - 2015 Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top