நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வைத்தியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டமை வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக அல்லவாம். வைத்தியர்கள் முறையாக கடமைக்கு வராமை. வேலை செய்யாது மேலதிக கொடுப்பனவு பெறல், கடமையில் உள்ள வைத்தியர்கள் வீடுகளில் தனியாக வைத்தியம் பார்த்து பணம் சம்பாதிப்பதற்காக அவர்களுக்குள் இணக்கப்பாடான வகையில் வைத்தியசாலைக்கு வருகை தரல், நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் அசமந்தப் போக்கு போன்றவைகளை குறிப்பிட்ட வைத்திய அதிகாரி நிந்தவூர் வைத்தியசாலைக்கு வருகை தந்த நாள் முதல் கண்டித்து வந்தாராம். இதற்காகவே வைத்திய அதிகாரியை மாற்றுவதற்கு பல வேலைகளை செய்தும் வைத்திய அதிகாரி இடமாற்றம் பெற்றுப் போகவில்லை. இறுதியாக வைத்திய அதிகாரியை மாற்று முடியா விட்டால் எங்களை மாற்று என்று சிக் லீவு போராட்டத்தை வைத்தியர்கள் மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்கள். வைத்திய அதிகாரி அக்கரைப்பற்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு சுகாதாரத்தின் புதிய பிரதி மந்திரியும் உதவியாம். ஆவரின் உத்தரவின் படியே இடமாற்றம் நடந்ததாம். தனக்கும் இடமாற்றத்திற்கும் சம்பந்தமில்லை என மந்திரி தெரிவித்துள்ளார். வைத்தியர்கள் சிக் லீவில் நின்றாலும் இரண்டு வைத்தியர்கள் நோயாளிகளுக்கு மருந்து வழங்கியுள்ளார்கள். இவர்களை பாராட்ட வேண்டும். இவ்விரு வைத்தியர்களும்தான் நிந்தவூரில் அக்கரை கொண்டவர்கள். சிங்களத்தில் நோயாளியை வார்ட்டில் வைக்கும் அனுமதி சிட்டை எழுதும் வைத்தியரும் நிந்தவூர் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார். அவர் பார்த்தால் பசு. இப்போதுதான் புரிகின்றது அது பசுவல்ல என்று.
இவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கட்டுமாம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.காவில் அலிசாஹிர் மௌலானா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடும் கஸ்டப்பட்டு வென்றாராம். இவர் போட்டியிட்டதால்தான் மு.காவிற்கு ஒரு எம்.பி கிடைத்ததாம். அதனால், இவருக்கு ரவூப் ஹக்கீம் துரோகம் செய்து விட்டாராம். அலிசாஹிர் மௌலானா மு.காவில் போட்டியிட்டதால்தான் எம்.பியானார். இவர் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால் ஹிஸ்புல்லா தோல்வியடைந்திருக்க மாட்டார். இலகுவாக வெற்றி பெற்றிருப்பார். ஆலிசாஹிர் மௌலானா மு.காவில் போட்டியிடாது இருந்தால் மு.காவிற்கு எம்.பி இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அது போலவே அலிசாஹிர் மௌலானா மு.காவில் போட்டியிட்டதால்தான் எம்.பியானார். கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஏறாவூர்தானே இன்னுமா ஏறாவூருக்கு அமைச்சர் பதவி வேண்டும்.
அமைச்சர் பதவிகளும் பட்டாசுகளும்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர், பிரதி அமைச்சர், இராஜாங்க அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதற்காக அவர்களின் ஊர்களில் பட்டாசுகள் கொளுத்தி கொண்டாடுகின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் கிடைத்த சந்தோசமோ இவர்களுக்கு? அமைச்சர் பதவிகள்தான் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளா? முஸ்லிம்களில் ஒரு கூட்டம் அகதி வாழ்வு, இருப்பதற்கு வீடு இல்லை. காணி இல்லை. அதற்குள் அமைச்சர் பதவிகளுக்கு பட்டாசுகள் வெடிக்கின்றன. தேவைதான் தொடர்ந்து வெடிக்கட்டும் சமூகம் முன்னேறும்.
கவனர் பதவியா? யாருக்கு வேண்டும்...கொடுக்கட்டும்
தனித்துவக் கட்சியின் தே. விவகாரம் முடிவுக்கு வரவில்லை. தனித்துவக் கட்சியின் வளர்ச்சிக்கு முழங்கியவரும், அவருடன் கூடவே தனித்துவக் கட்சித் தலையின் அன்பைப் பெற்ற இளமையும், உயரமும் கொண்டவரும் சென்று, தனித்துவக் கட்சியின் தே. பிரதியாக வேண்டுமென்று விரும்பும் மூத்தவரிடம் உங்களுக்கு தலை கவனர் போஸ்ட தர விரும்புகின்றார். நீங்கள் தே. பிரதிநிதிக்கு விட்டுக் கொடுப்பு செய்யலாம்தானே என்றாராம். மூத்தவருக்கு வந்த கோபத்தில் கவனர் பதவியை ........கொடுக்கச் சொல்லுங்கள் என்றாராம் என்று தனித்துவக் கட்சியின் முதற் செயலாளரின் ஊரார் ஒருவர் காதில் போட்டார்.
இவர்தான் வன்னி வசந்ததிற்கு 06 இலட்சம் செலவு
இவர்தான் வன்னியின் வசந்தம். அடங்க தமிழன் என்று அண்;மையில் வன்னியில் 6 இலட்சம் செலவு செய்தார்.
ஆறு இலட்சமா ஏன் எதுக்கு ஏதும் கஸ்ட்பட்ட ஆக்களுக்கு உதவி செய்தாரா இல்லை பள்ளிகூடம் ஏதும் கட்ட காசு குடுத்தாரா இந்த புன்னியவான்
பாராளுமன்ற 'கு' பிரதி கிடைத்தவுடன் ஏதோ நாடு கிடைத்து விட்து போல் மன்னார் மாவட்டத்தின் பட்டி தொட்டி எல்லாம் செல்கிறீர்களே இது உங்களுக்கு நல்லாவா உள்ளது......
தமிழர்கள் தீர்வுக்காக அல்லலாடும் வேளையில் நீங்கள் 50 – 60 ரூபாய் மாலைகளுடன் வீதிக்கு வீதி நடப்பது உங்களுக்கே சிரிப்பாக இல்லையா....
இதே பதவியைத் தான் உங்கள் தோழர் ஒருவர்தான் முன்னர் வகித்தார.; அவர் இதற்கு விழா எடுக்கவுமிஇல்லை. விளக்குப் பிடிக்கவுமில்லை. ஏன் ஐயா இந்தக் கொடுமை.
முஸ்லிம் அமைச்சர்களை விடவும் இவர் எவ்வளவோ தகும்.
வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எச்சரிக்கை
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்காவிட்டால், வட மாகாணசபை உறுப்பினர் பதவியையும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையையும் ராஜினாமா செய்ய நேரிடும் என வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார் .
அனந்தியுடன், மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் இணைந்து யுத்தக்குற்றங்கள் தொடர்பில் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது, எனினும், இலங்கை தமிழரசுக்கட்சி இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறினால் பதவிகளை துறக்கப் போவதாக அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சியின் சார்பில் எந்தவொரு பிரதிநிதியும் ஜெனீவா விஜயம் செய்யப் போவதில்லை எனவும் கட்சியன்றி தனிமையில் ஜெனீவா செல்லமுடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மு.காவில் மஸ்தான் இணைவு
வன்னி மாவட்ட எம்.பி மஸ்தான் மு.காவில் இணைந்துள்ளார். றிசாட்டுக்கு எதிராக வன்னியில் அரசியல் செய்வதற்கு ரவூப் ஹக்கீம் ஒரு மாதிரியாக ஆள் பிடித்து விட்டார். மஸ்தான் இணைவு றிசாட்டுக்கு வயிற்றில் புளி கரைக்கும். இப்படி நடக்குமென்று யார் கண்டார்?
இதே வேளை, வன்னி மாவட்ட அபிவிருத்தி பணிகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் மு.காவுடன்; இணைந்து ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
கணவனைப் பார்வையிட பாலியல் இலஞ்சம்!
சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் உறவுகளை பார்வையிடச் செல்லும் பெண்களிடம் சிறை அதிகாரிகளினால் பாலியல் இலஞ்சம் கேட்கப்படுவதாக கைதிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இலங்கையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை கடந்த வியாழக்கிழமை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறைக்கைதியொருவரின் மனைவி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் தனது கணவரைப் பார்வையிடச் செல்லும் போது, தன்னிடம் பணம் மற்றும் பாலியல் இலஞ்சம் கோராப்படுவதாகவும், இதனால் தான் மிகுந்த மனவேதனையுடன் நிர்க்கதியான நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வட மாகாண சபையை கலைக்கவும்
நாட்டிலுள்ள மாகாணசபைகளினை கலைத்து மீள தேர்தல் நடத்தப்படும் போது வடமாகாணசபையினை கலைத்துவிடுமாறு புதிய எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இத்தகைய ஆலோசனையினை வழங்கியுள்ளார்.
ஆட்சி மாற்றம் காரணமாக தெற்கில் பொதுஜன ஜக்கிய மக்கள் முன்னணி வசமிருந்த பல மாகாணசபைகள் ஸ்திர தன்மையினை இழந்துள்ளன. அவற்றிற்கு புதிய முதலமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அனைத்து மாகாணசபைகளினையும் கலைத்துவிடுவது தொடர்பில் சிந்தித்துவரும் ரணில் வடமாகாணசபை தொடர்பில் புதிய எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் ஆலோசனையினை கோரியுள்ளார். அப்போது வடமாகாணசபையினை கலைப்பதற்கு தனது பூரண சம்மதத்தினை தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் மீண்டும் தேர்தல் ஒன்றினை நடத்துவது பற்றி பிரஸ்தாபித்துள்ளார்.
0 comments:
Post a Comment