• Latest News

    September 11, 2015

    பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக திலக் ரணவிராஜா நியமனம்

    பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக நிர்வாக சேவை சிரேஷ்ட உத்தியோகத்தரும், ராஜதந்திரியுமான திலக் ரணவிராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
     
    இவர் கடந்த எட்டாம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதியைச் சந்தித்து தனது உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை கையளித்ததுடன், ஜனாதிபதி மைத்திரிபாலவின் விசேட வாழ்த்துச் செய்தியையும் கையளித்திருந்தார்.

    கடந்த ஜனவரி தொடக்கம் திலக் ரணவிராஜா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆலோசகர்களில் ஒருவராக கடமையாற்றி வந்தார். அதற்கு முன்னர் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு அமைச்சு, ஊடக மற்றும் தொடர்பாடல் அமைச்சு, சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு, சமூக நலனோம்பல் அமைச்சு, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு, மஹாவலி அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

    அத்துடன் சர்வதேச ரீதியில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம், ஐக்கிய நாடுகள் பொருளாதார செயற்திட்டம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு, உலக சுகாதார அமைப்பு என்பவற்றிலும் இவர் ஆலோசகர் தர பதவிகளை வகித்துள்ளார்.

    திலக் ரணவிராஜாவைப் பொறுத்தமட்டில் சற்று தீவிர சிங்கள இனவாதப் போக்குடையவர் என்ற வகையில் பாரிசில் வாழும் தமிழ் மக்களுக்கு தூதரகம் ஊடான சேவைகளைப் பெறுவதில் இனிவரும் காலங்களில் சிறிது இடைஞ்சல்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக திலக் ரணவிராஜா நியமனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top