• Latest News

    November 29, 2015

    கண்டி நகர அபிவிருத்திக்கு ஒற்றுமையுடன் செயற்பட கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்


    வெளிநாட்டு நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள கண்டி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை அந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் அடிக்கடி ஒன்றுகூடி மீளாய்வு செய்தெனவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயரதிகாரிகள் உரிய செயல்திட்டங்கள் தொடர்பான வரைவுகளையும், தரவுகளையும் தயார்படுத்தி அதன்போது முன்வைக்க வேண்டுமெனவும் வியாழக்கிழமை (26) முற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.


    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியல்ல, மலிக் சமரவிக்ரம, எம்.எச்.ஏ.ஹலீம், சரத் அமுனுகம மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை, முதலீட்டு ஊக்குவிப்பு சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமை;பு சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன உட்பட தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கண்டி நகர அபிவிருத்திக்கு ஒற்றுமையுடன் செயற்பட கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top