கல்முனை
ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபரும். மூத்த கல்விமானுமான காலஞ்சென்ற
மர்ஹூம் எஸ்.எச்.எம். ஜெமீல் நினைவுப் பேருரை, எதிர்வரும் நவம்பர் 29ஆம்
திகதி ஞலை 09.00 மணிக்கு கொழும்பு - 07 இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை
அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது
இதன்போது,
மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் தொடர்பான நினைவு மலரொன்றும்
வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வெளிவிவகார அமைச்சின்
பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸும் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த
நிகழ்வில் இடம்பெறவுள்ள மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் தொடர்பான குழு
கலந்துரையாடலில் மொரட்டுவ பல்கலைக்கழக பதிவாளர் ஜௌபர் சாதீக், சுகாதார
அமைச்சின் பணிப்பாளரும் சிரேஷ்ட வைத்தியருமான ஏ.எல்.எம்.பரீட், ஓய்வுபெற்ற
வலயக் கல்வி பணிப்பாளா மருதூர் ஏ. மஜீத் மற்றும் களுத்துறை முஸ்லிம் மகா
வித்தியாலய அதிபர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.
இதேவேளை,
இதன் இரண்டாவது அமர்வில் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க
கொழும்புக் கிளையின் வருடாந்த மாநாடும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் கொழும்பு வாழ் பழைய மாணவர்கள் அனைவரையும்
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை
அழைப்பு விடுக்கின்றது.
உங்களது வருகையை
உறுதிப்படுத்திக்கொள்ளவும், மேலதிக ஏற்பாடுகளுக்கும் உங்களது பெயரை
0772987367 என்ற இலக்கத்துக்கு எஸ்.எம்.எஸ். செய்யுமாறு
வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இந்த நிகழ்வு
தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின்
செயலாளர் தௌபீக் எம். கானை மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது
secretary.col@ kalmunaizahiraoba.lk என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்பு கொள்ளமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment