நம் நாட்டிலும் சரி வெளி நாடுகளிலும் சரி சந்தையில் மென்பான குடிபான நிறுவனங்கள் தமது மென்பானங்ளை விற்பனை செய்வதற்காக சில குறுகிய கால சலுகைகள் பலவிதமான வடிவங்களில் வழங்குவதுண்டு .
அந்த வகையில் கத்தாரில் குறித்த மென்பான நிறுவனம் விற்பனை உக்தியாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் குளிர்பான போத்தலின் மூடியில் சில இலக்கங்களை கொடுத்து அதன் மூலம் பல போத்தல்களின் மூடிகளை சேர்த்து வரும் கூட்டுத்தொகை 2500 என்று வந்தால் 32 இஞ் தொலைக்காட்சி பெட்டியை பரிசாக கொடுத்ததது .
எல்லா மூடிகளிலும் ஒரே எண்ணிக்கை இருக்காது சிலதில் 2 சிலதில் 5 சிலதில் 50 சிலதில் 150 என வித்தியாசம் வித்தியாசமான எண்ணிக்கைகள் இருக்கும் அவைகளை மொத்தமாக சேகரித்து அந்த எண்ணிக்கையை கூட்டிய தொகை 2500 ஆக வருதல் வேண்டும் அப்போதே ஒரு தொலைக்காட்சி பெட்டி பரிசாக கிடைக்கும். இதை சேர்ப்பது என்பது இலகுவான காரியமும் இல்லை இங்குள்ள வேலைப்பளுக்களுக்கு மத்தியில் அவ்வளவு இலகுவான காரியமும் இல்லை.
விடையத்திற்கு வருகிறேன் நம்மூர்க்காரல் ஒருவர் எதேர்ச்சையாக குறிப்பிட்ட சில மூடிகளை பெற்று கூட்டுத்தொகையை பார்த்திரிக்கிறார் 2500 தை தாண்டி இருந்ததை அறிந்து உடனடியாக குறித்த நிறுவனத்திற்கு அழைப்பை போட்டு சொல்லி இருக்கிறார் அவர்களும் தலைமை காரியாலயத்திற்கு வந்து மூடிகளை சமர்பித்து உங்களின் தொலைகாட்சி பெட்டியை பெற்றுகொல்லுங்கள் என்று சொன்னதும் இவரால் நம்ப முடியவில்லை உடனிடியாக சென்று கையில் பெற்றுக்கொள்ளும் வரை.
நம்மூர்காரல் சும்மா விடுவானா ஒரு தொலைகாட்சிபெட்டி பெற்ற ஆசையில் மொத்தமாக ஒரு கெண்டைனர் முழுவதும் பேசி மென்பானத்தை தனது இருப்பிடத்திற்க்கு வரவழைத்து அத்தனையையும் நண்பர்களின் உதவியுடன் மூடிகளை வேறாக்கும் பணியை செய்துள்ளார் ஒரே நாளில் குளிர்பானத்தை அவ்வளவையும் என்ன செய்தார் என்று ஜோசிக்காதீர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் என்று எல்லோருக்கும் இலவசமாக கொடுத்துள்ளார் மொத்தமகா மூடிகளில் பெற்ற அத்தனை பொயின்ட்ஸ் களையும் கூட்டியுள்ளார் 2 அரை இலட்சத்தை தாண்டிய தொகை கிடைத்துள்ளது
அத்தனையையும் மொத்தமாக கொடுத்தால் பரிசுப்பொருள் ஒரே ஆளுக்கு கிடைக்காது என்று அறிந்து தனது நண்பர்கள் பலரின் உதவியுடன் குறித்த மென்பான நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளார் நிருவனக்காரர்கள் அதிர்ந்து போய் விட்டார்கள் மொத்தமாகவே அவர்களுக்கு கத்தாருக்கு பரிசாக கொடுக்க வந்த தொலைக்காட்சி பெட்டிகளின் எண்ணிக்கை வெறும் 20 மட்டுமே ஆனால் ஒரே நாளில் விண்ணப்பித்தவர்களின் கணக்கு பார்த்தால் 100 தாண்டிய தொலைக்காட்சி பெட்டி கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு குறித்த நிறுவனம் தள்ளப்பட்டுவிட்டது அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை சர்வதேச தர நிறுவனம் என்பதால் தமது நிறுவனத்திற்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக ஒரே நாளில் அத்தனையையும் கொடுத்தே விட்டார்கள்.
நாட்டுக்கு கொண்டு வரமுடியாது மொத்தமாக கிடைத்த அத்தனையையும் அவரால் என்ன செய்வதென்று தடுமாறி போனார் என்றாலும் நண்பர்களின் உதவியுடன் ஒரு மாறியாக ஒன்றும் இரண்டுமாக சந்தை விலையைவிட சற்று குறைத்து விற்று தீர்த்து விட்டார் இன்னும் சிலதே உள்ளது அது எனக்கு பாவனைக்கு தேவை என்று சொல்லி முடித்தார்.
இதில் உங்களுக்கு எவ்வளவு இலாபம் என்று கேட்டதற்கு ஒரு 10 / 20 டிவிகள் மிச்சம் எனக்கு என்று மிகவும் சுலபமாக சொன்னபோதுகுறித்த மனிதரின் தைரியத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் ஒரு சலூட் போடணும் போல் இருந்தது.
இதுவும் ஒரு வகையில் முதல் போட்ட தொழில்தான் அல்லவா..!!
நம்ப முடியவில்லை அல்லவா நானும் நம்பவில்லை குறித்த நபரை நேரில் சந்திக்கும் வரை.
Farsan S Muhammad
Doha – Qatar

0 comments:
Post a Comment