எஸ்.எம்.மஸாஹிம்: பங்களாதேஷ் ஹஸீனா
அரசாங்கம் தனது எதிர்கட்சிகளின் இரு மூத்த தலைவர்களுக்கு மீண்டும்
சர்ச்சைக் குரிய மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது , ”ஹசீனாவின் நிர்வாகத்தின்
அரசியல் பழிவாங்கல் நோக்கத்துக்காக
உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நீதிமன்றத்தால் வழங்கபட்ட இந்த தீர்ப்பு”
மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவு
நிறைவேற்றப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் ஜமாஅதே இஸ்லாமியின் இரண்டாம்
நிலை முக்கிய தலைவரான அலி அஹ்ஸான் மொஹமத் முஜாஹித் என்ற 67 வயது
நிரம்பியமுதியவருக்கும் , முன்னாள்பாராளுமன்ற உறுப்பினரும் பிரதான
எதிர்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சியின் தலைவி காலிதா சியாவின் முக்கிய
உதவியாளருமான சலாஹுதீன் காதிர் சவுத்ரீ என்ற 66 வயது முதியவர், ஆகிய
இருவருக்கும் இந்த சர்ச்சைக்குரிய மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து
பிரிவதற்கான ” பங்களாதேஷ் சுதந்திரப்” போராட்டத்தை கடுமையாக
எதிர்த்ததாகவும் அதில் படுகொலைகளை புரிந்ததாகவும் ஹசீனாவின் நிர்வாகம்
இவர்கள் மீது குற்றம் சுமத்தியிருந்தது , இது தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட
நீதிமன்றம் சர்வதேசநீதி ஒழுங்குகளை மீறியுள்ளதாக சர்வதேச அமைப்புகள்
கண்டங்களை தெரிவிதுவந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது
அண்மைய காலங்களில் எதிர்கட்சிகளில் ஒன்றான
பங்களாதேஷ் ஜமாஅதே இஸ்லாமியின் முக்கிய தலைவர்கள் பலர் தூக்கிலிடப்பட்டு
கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
பங்களாதேஷ் ஆளும் ஹசீனா நிர்வாகம் தனது அரசியல் எதிராளிகளை மிக மோசமாக ஒடுக்கி வருவதாக சர்வதேச அளவில் விமர்சங்கள் எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment