-எம்.வை.அமீர் -
இவ்வருடம் சாய்ந்தமருது கல்விக்கோட்டத்துக்குள் புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல், பாராட்டி
கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் 2015-11-29 அன்று இவ்வமைப்பின்
தலைவர் அஸ்வான் சக்கப் மௌலானா தலைமையில் இடம்பெற்றது.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த
மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என பெரும்திரளானோர் கலந்து கொண்டிருந்த
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட
பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் அவர்கள் கலந்து சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதல்களையும்
நினைவுச் சின்னங்களையும் வழங்கிவைத்தார்.
நிகழ்வுக்கு விசேட அதிதியாக உலமா கட்சியின்
தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்கள் கலந்து
கொண்டார். கௌரவ அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார், முன்னாள்
அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சீ.ஆதம்பாவா, சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸ்ஸாக் பொலிஸ்
கல்முனை பொலிஸ் நிலைய விடய பொருப்பாதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், முன்னாள் கல்விப்
பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மட் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதுடன் பாடசாலை அதிபர்கள்
மற்றும் உயர் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.








0 comments:
Post a Comment