• Latest News

    November 30, 2015

    சிறந்த கல்வி வலயம் அக்கரைப்பற்று: மாகாண சுகாதார அமைச்சர் புகழாரம்

    அபு அலா –
    கிழக்கு மாகாணத்தில் விஷேடமாக அக்கரைப்பற்று கல்வி வலயம் சிறந்ததொரு வலயமாக இன்று பேசப்பட்டு விருகின்றது. இது எனக்குமட்டுமல்ல அம்பாறை மாட்டத்துக்கும் பெருமை தரக்கூடியவகையில் அமைந்திருப்பதை நாம் பெருமையாக விழங்கிக்கொள்ளவேண்டும் எனவும் இப்பாடசாலையின் வளச்சிக்காக என்னாலான உதவிகளை செய்யத்தயாராக இருக்கின்றேன் என்ற செய்தியை தெரிவிக்கும் இதேவேளை இப்பாடசாலையின் சுற்றுமதில் அமைப்புக்காக 3 இலட்சம் பணத்தினை வழங்கியுள்ளேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

    அக்கரைப்பற்று ஹிரா ஆங்கில பாடசாலை மாணவர்களின் 2015 ஆம் ஆண்டின் விடுகை விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம்பெற்ற விழாவுக்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

    பாலர் பாடசாலைகள் யாவும் இலங்கையில் மிக முக்கியமாக சிறந்துவிழங்கும் நிறுவனங்களாக உள்ளன. அதிலும் ஆங்கில பாலர் பாடசாலையை நடாத்தி செல்வதென்றால் ஒரு பாரிய சவால்களுக்கு மத்தியில்தான் கொண்டு செல்லவேண்டியுள்ளது.

    மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியையும், அவர்களின் வாழ்க்கையையும் இந்த பாலர் பாடசாலைகள்தான் நிர்ணயிக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகது. அவர்களின் பல்களைக்கழக கல்விக்கும் வளர்ச்சியை பாலர் பாடசாலையின் ஆரம்பக் கல்வியே வித்திடுகின்றது. இந்த பாலர் பாடசாலைகளில் கல்வி கற்றுக்கொடுக்கின்ற ஆசிரியர்கள் பாரிய சவால்களை சந்தித்துத்துதான் அவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

    கிழக்கு மாகாணத்தில் பாலர் பாடசாலைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக ஒரு தனியான பணியகம் இயங்கி வருகின்றது. அதற்காக ஒரு நியதிச்சட்டமும் உறுவாக்கி இயக்கம்பெற்று வருவதை நாமறிவோம். அதற்கு பெற்றோர்களாகிய நாம் பாரியளவிளான ஒத்துழைப்புகளையும், ஒத்தாசைகளையும் வழங்கி வந்தால்தான் எமது பாலர்களின் கல்வி வளச்சியையும், எதிர்கால வளச்சியையும் ஒரு முன்னெற்றப்பாதைக்கு இட்டுச்செல்ல்லாம் என்றார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறந்த கல்வி வலயம் அக்கரைப்பற்று: மாகாண சுகாதார அமைச்சர் புகழாரம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top