சண்டேலீடர்
ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய முக்கியதாரியை
கைது செய்ய குற்றப்புலனாய்வுப்பிரிவினர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம்
அறிவுரை கோரியுள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லசந்த விக்கிரமதுங்க, 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று கொலை செய்யப்பட்டார்.
கொலையில் முக்கியமானவர் என்று கருதப்பட்ட கந்தேகெதர பிரியவன்ச என்பவர் முன்னதாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் தற்போது கிடைத்துள்ள புதிய ஆதாரங்களின்படி இவரை கைது செய்யக்கோருவதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment