• Latest News

    November 29, 2015

    மைத்திரிபால சிறிசேனவுக்கு நோபல் பரிசு?

    மைத்திரிபால சிறிசேனவுக்கு நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சர்வதேச ரீதியில் ஆலோசனை இடம்பெற்று வருகின்றதென அமைச்சர் ஜோன் அமரதுங்க தகவல் வெளியிட்டார்
    நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தகவலை வெளியிட்டார்.
    அவர் மேலும் தெரிவிக்கையில்,
    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைந்து கருத்தொருமைப்பாட்டு தேசிய அரசு அமைக்கப்பட்டு நாட்டின் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    இதனால் சர்வதேச ரீதியில் எமக்கு இதுவரை காலமும் இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
    தடை செய்யப்பட்டுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அடுத்த வருடம் மீண்டும் கிடைக்கவுள்ளது. இவ்வாறாக தடைகள் நீக்கப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சி தொடர்பில் உலகம் எம்மை புகழ்ந்து பாராட்டுகின்றது.
    இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சர்வதேச ரீதியில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.
    நாமும், எமது நாட்டு மக்களும் பெருமைப்படக்கூடிய விடயமாகும் என்று மேலும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மைத்திரிபால சிறிசேனவுக்கு நோபல் பரிசு? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top