• Latest News

    December 06, 2015

    மருதமுனை சைல்ட் பெஸ்ட் பாலர் பாடசாலையின் 11வது ஆண்டு பாடசாலை தினம்..!

    எம்.வை.அமீர்-
    மருதமுனை (Child First Pre-School) சைல்ட் பெஸ்ட் பாலர் பாடசாலையின் 11வது ஆண்டு பாடசாலை தினம் அங்கு கல்வி கற்ற மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் கோலோச்ச பாலர் பாடசாலையின் தலைவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் 2015-12-05 அன்று மருதமுனை அல் மனார் மதிய மகாவித்தியாலய கேட்போ கூடத்தில் இடம்பெற்றது.
    இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறை தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் பங்குகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களையும் சான்றிதல்களையும் வழங்கிவைத்தார்.
    தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.ஜுனைதீன் கௌரவ விருந்தினராகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஏ.எம்.நௌபில், தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை பீடத்தின் துறைத்தலைவர் விரிவுரையாளர் எம்.எச்.எம்.நைரோஸ் மற்றும் அல் மனார் மதிய மகாவித்தியாலயத்தின் அதிபர் எம்.எம்.ஹிருபாகன் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும், பிரமுகர்களாக முன்னாள் உயர் நீதிமன்ற ஆணையாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜெமீல், பிரதி அதிபர் ஏ.எம்.அன்சார்,கணக்காளர் கே.எம்.ரிஸ்வி ஆகியோர் கலந்து கொண்ட அதேவேளை கல்முனை மற்றும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற CCO எம்.எஸ்.எம்.சப்ரின் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.
    மாணவர்கள் அவர்களது பெற்றோர் பார்வையாளர்கள் என மண்டபம் நிறைந்து காணப்பட்டது.









    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருதமுனை சைல்ட் பெஸ்ட் பாலர் பாடசாலையின் 11வது ஆண்டு பாடசாலை தினம்..! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top