(எம்.எம்.ஜபீர்)
கல்முனை கீறீன் பீல்ட் சுனாமி வீட்டுத்
திட்டத்தில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக நுளம்பினால்
பரவுகின்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்கு முகாமைத்துவக் குழுவினால்
நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச்
செயலாளர் ரஹ்மத் மன்சூரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனையடுத்து
கல்முனை கீறீன் பீல்ட் சுனாமி வீட்டுத் திட்டத்தின் முகாமைத்துக்
குழுவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீர்வழங்கல்
வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத்
மன்சூர் தனது சொந்த நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட மின்போக்கர் நுளம்பு
கட்டுப்பாட்டு தெளிகருவியை கீறீன்பீல்ட் சுனாமி வீட்டுத் திட்ட முகாமைத்துவ
குழுவின் தலைவர் ஏ.எல்.எம்.கபூலிடம் (ஆஸாத் ஹாஜியார்) நேற்று கையளித்தார்.
இதன்போது முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கீறீன் பீல்ட் சுனாமி வீட்டுத் திட்டத்திலுள்ள நிலவும் குறைபாடுகளையும் கேட்டரிந்துகொண்டார்.

0 comments:
Post a Comment