எம்.வை.அமீர் -
2015-12-08 அதிகாலை சம்மாந்துறையிலிருந்து உரப்பைகளை ஏற்றிக்கொண்டு
வங்களாவடிச்சந்தி வழியாக வயலுக்கு மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்த வண்டிக்காற கரவாகர்
என்றழைக்கப்படும் சுமார் 62 வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தந்தையான
ஆதம்பாவா தங்கராசா என்பவர் அதே திசையில் அம்பாறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக
வாகனம் ஒன்றினால் மோதுண்ட காரணத்தால் ஸ்தலத்திலேயே காலமானதுடன் மாடு, மாட்டுவண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். பொலிசாரின்
விசாரணைக்கு சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா களத்தில் நின்று உதவினார்.
0 comments:
Post a Comment