(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை முஸ்லிம்
மகளிர் வித்தியாலத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த
சாதனையாளர்களை பாராட்டு விழா நவமணி பத்திரிகையின் ஊடக அனுசரணையில் நேற்று
பாடசாலை அதிபர் கயறுன்னிஸா தலைமையில் பாடசாலை வெளி அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத்
தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம்,
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், நாபீர் பவுண்டேசன் தலைவர்
யூ.கே.நாபீர், உலமாக்கள், கல்வியளர்கள், உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள்,
மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், ஊரின் முக்கியஸ்தர்கள், பாடசாலை
அபிவிருத்தி குழு பிரதிநிதிகள், என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது
புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள், சித்தியடைந்த மாணவர்கள்,
கற்பித்த ஆசிரியர்கள், அதிபர் கௌரவிக்கப்பட்டதுடன் கலந்துகொண்ட
அதிதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ்
விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும்; ஏ.பீ.எம்.இம்ரான் மற்றும் நவமணி
பத்திரிகையின் ஆசிரிய பீட உறுப்பினர் பி.எம்.கியாஸ் ஆகியயோர்கள் தொகுத்து
வழங்கினார்.
0 comments:
Post a Comment