அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கணக்காளராக கடமையாற்றிவரும் நிந்தவூர் 16 ஆம் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட கணக்காளர் முகம்மது கலீல் என்பவர் நிதித்துறையில் நிபுணரத்துவப் பட்டம் பெற்றுள்ளார்.
(Institute of Doctorial Fellow Financial Manager) ஐக்கிய இராட்சியத்தின் தொழிற் தகமை நிதி முகாமைத்துவ கல்வி நிறுவனத்தினால் இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் வணிகமானி சிறப்புப்பட்டம், உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமாவும் பொது நிறுவாகத்துறையில் முதுமானி தத்துவமானி பட்டங்களையும் பெற்றவருமாவார். இவர் இலங்கை கணக்கறிஞர் சேவையின் சிரேஷ்ட கணக்கறிஞருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment