நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாட்டின் சகல மாகாணங்களையும் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளை சனிக்கிழமை (12) தமது அமைச்சின் கேட்போர் கூடத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். இக் கலந்துரையாடலில் நீர் விநியோகம் தொடர்பிலான இடர்பாடுகள், பிரச்சினைகள், தேவைப்பாடுகள் மற்றும் நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களுக்கும் நீர் விநியோகத்தை துரிதப்படுத்தலுக்கான செயல் திட்டங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடினார். இச் சந்திப்பு ஐந்து மணிநேரம் நீடித்தது.
இதில் அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.மங்கலிக்கா, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர்; பொறியியலாளர் கே.ஏ.அன்சார் உட்பட உயர் அதிகாரிகள்; பலர் பங்குபற்றினர்.
0 comments:
Post a Comment