நீதிமன்றத்தின் உத்தரவை மீறி எதிர்ப்பு
ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டதுடன் மத்திய வங்கி வளாகம் மற்றும்
அதியுயர் பாதுகாப்பு வலையத்திற்குள்ளும் உட்பிரவேசிக்க முயன்ற
கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த 11 பாராளுமன்ற உறுப்பினர்கள்
அடங்கலாக 15 பேரை நாளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு
எதிராக புறக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த
உறுப்பினர்களுக்கே இவ்வாறு நீதிமன்றத்தினால் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஸ்குணவர்தன,
வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, பந்துல குணவர்தன, நாமல் ராஜபக்
ஷ, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரசன்ன
ரணதுங்க,ரோஹித அபேகுணவர்தன, ஸ்ரீயானி விஜயவிக்ரம, ரஞ்சித் சொய்சா
ஆகிய உறுப்பினர்கள் அடங்கலானோருக்கே இவ்வாறு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டு எதிர்க்கட்சியினரின் பாதயாத்திரையின் இறுதி நிகழ்வு நாளை முதலாம் திகதி கொழும் பில் நடைபெறவுள்ளது.
இந்நிலையிலேயே கூட்டு எதிர்க்
கட்சியைச் சேர்ந்த குறித்த உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
0 comments:
Post a Comment