வலுவான அரசியல் ஸ்திரதன்மையை மக்கள் மத்தியில் நிலை
நிறுத்தும் நோக் கில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கூட்டு
எதிர்க்கட்சியின் கொழும்பு நோக் கிய பாதயாத்திரை நாளை திங்கட்கிழமை
இறுதி இலக்கை அடைய உள்ளது.
கண்டி மற்றும் மாவனெல்லை நீதி மன்றங்கள் இரண்டு தடை
உத்தரவுகளை விதித்திருந்த நிலையில் கேகாலை, வறக்காபொல மற்றும்
பேலியகொடை நீதி மன்றங்கள் பாதயாத்திரை தொடர்பில் பொலிஸாரினால் கோரிய
தடை உத்தரவை நிராகரித்துள்ளன. இந்நிலையில், மஹிந்த அணியினரின்
எதிர்பார்ப்புகள் வெற்றி இலக்கை
அடையுமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் பாதயாத்திரை கொட்டும் மழைக்கு மத்தியில் நெலுந்தெனியவில் இருந்து நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுனப்பினர் டலஸ் அழகப்பெரும, எத்தனை தடைகள் வந்தாலும் கொழும்பை நோக்கிய பாதயாத்திரையை வெற்றிக்கரமாக முன்னெடுப்போம் என்றார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிய ஐந்து நாள் பாதயாத்திரை இன்று நிட்டம்புவையில் இருந்து கிரிபத்கொடையை நோக்கி வரவுள்ளது. இறுதி நாளான நாளை திங்கட் கிழமை கிரிபத்கொடையிலிருந்து கொழும்பை நோக்கி பாதயாத்திரை வந்து சேரும்
கடந்த வியாழக்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக கொழும்பை நோக்கிய பேரணி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் நீதி மன்ற உத்தரவிற்கு அமைவாக கண்டி நகர எல்லைக்கு வெளியில் பாதயாத்திரையை ஆரம்பிக்க வேண்டிய நிலை கூட்டு எதிர் கட்சியினருக்கு ஏற்பட்டது. இதனால் கெடபே விகாரைக்கு அருகில் இருந்து காலை 10 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பை நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, டளஸ் அழகப்பெரும, கேஹெலிய ரம்புக்வெல்ல, நாமல் ராஜபக் ஷ, உதய கம்மன்பில, பவித்ரா வன்னியாராச்சி, மஹிந்தானந்த அழுத்கமகே, திலும் அமுனுகம, கீதா குமாரசிங்க, குமார வெல்கம, சீ .பி.ரத்நாயக்க, ஜொன்ஸ்டன் பெர்னாணடடோ பிரசன்ன ரணதுங்க, தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.
முதல் நாள் மானெல்லை வரை பேரணி செல்லும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் மாவனெல்லை நீதவானின் தடை உத்தரவு காரணமாக பாதயாத்திரை கனேதென்ன பகுதியில் நிறைவிற்கு வந்தது. இரண்டாம் நாள் உத்துவன்கந்த பகுதியில் ஆரம்பித்த பாதயாத்திரை கேகாலை ஊடாக நெலுந்தெனிய என்ற இடத்தில் நிறைவடைந்தது. மூன்றாவது நேற்று சனிக்கிழமை நெலுந்தெனியவிலிருந்து நிட்டம்புவையை நோக்கி நகர்ந்தது.
நான்காவது நாளான இன்று பாதயாத்திரை நிட்டம்புவையில் இருந்து கிரிபத்கொடை நோக்கியும் இறுதிநாளான நாளை திங்கட் கிழமை கிரிபத்கொடையிலிருந்து கொழும்பு ஹயிட்பார்க் மைதானம் வரை சென்று கூட்டு எதிர் கட்சியின் தலைவர்களின் உரைகளின் பின்னர் நிறைவடையும். புதிய அரசியலமைப்பில் நாட்டிற்கு எதிரான சதி, தேர்தல் ஒத்திவைப்பு, வரி அதிகரிப்பு, இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம், விவசாயிகளுக்கான மானிய இரத்து மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் ஆகிய 6 விடயங்களை மையப்படுத்தியே கூட்டு எதிர் கட்சி எதிர்ப்பு பாதயாத்திரையை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment