ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் கைது
செய்யப்படுவது ஒருபோதும் அரசியல் பழிவாங்கல் அல்ல. குற்றவாளி கள்
தண்டிக்கப்பட்டே தீருவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்தார்.
தற்போது ஊழல் மோசடிகள் முழுமையாக
ஒழிக்கப்பட்டமையின் காரணமாக மக்கள் நல திட்டங்களை
முன்னெடுப்பதற்கு நல்லாட்சி அரசினால் முடிந்துள்ளது என்றும் அவர்
குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை இணைப்பதற்கான விசேட நிகழ்வு நேற்று குருநாகல், மாவத்தகம பிரதேசத்தில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர்களான அகிலவிராஜ் காரியவசம், எஸ்.பி நாவின்ன பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார மற்றும் எஸ். அலவத்துவல ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியானது நாட்டில் அமைதி வழி புரட்சியை மேற்கொண்டு தேசிய அரசாங்கத்தை உருவாக்கிய கட்சியாகும். நாட்டின் அனைத்து விதமான அபிவிருத்தி திட்டங்களையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஏற்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். இலங்கையில் டி.எஸ் சேனாநாயக்க முதல் ஜே.ஆர்.ஜெயவர்தன வரையிலான எமது கட்சி தலைவர்கள் இந்நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பித்து நாட்டின் பொருளாதாரத்தை உலகிற்கு திறந்து வைத்தனர். ஆர்.பிரேமதாஸ வீடமைப்பு திட்டத்தை முன்னெடுத்து ஏழை மக்களுக்கு தேவையான மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்தார்.இது தான் எமது தலைவர்களாவர். இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு வாய்ப்பளித்தது யார்? எப்போதும் முன்நோக்கி நகரும் தலைவர்களை கொண்ட கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும்.
நாட்டை ஊழல் மோசடிகள் சுற்றியிருந்தன. ஊடக சுதந்திரம் முழுமையாக முடக்கப்பட்டிருந்தது. இன ரீதியாக மக்களை பிளவுக்கு உட்படுத்தியிருந்தனர். எனவே இந்நிலைமையை முழுமையாக மாற்றியமைத்து இலங்கையை சர்வாதிகாரத்திலிருந்து பாதுகாப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆக்கினோம்.
இந்நிலையில் தற்போது ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதும் நிதி மோசடி பிரிவிற்கு செல்வதனை ஊடகங்களின் ஊடாக காண்பிக்கின்றனர். எம்மீது அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். எனினும் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்வது ஒருபோதும் அரசியல் பழிவாங்கல் அல்ல. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே தீருவார்கள்.
எமது ஆட்சி அலிபாபாவும் நாற்பது திருடர்களையும் கொண்ட ஆட்சி அல்ல. திருட்டு கும்பல் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிட்டாலும் அது வெற்றியளிக்க போவதில்லை.
தற்போது ஊழல் மோசடிகள் முழுமையாக ஒழிக்கப்பட்டமையின் காரணமாக மக்கள் நல திட்டங்களை முன்னெடுப்பதற்கு நல்லாட்சி அரசினால் முடிந்துள்ளது. குருநாகல் மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

0 comments:
Post a Comment