• Latest News

    July 26, 2016

    நான் ஒரு ஈமான்தாரி.

    அண்ணல் நபி போதனைகளையும்
    அரசியலாக்கி முஸ்லிம் சமூகத்தை வாழ வைக்க
    'தக்பீரை'க் கையில்,அங்குசமாக எடுத்துக் கொண்டு
    ஆட்டம் போடும் வேஷதாரிகளே !
    குடியிலும், கூத்திகளின் மூத்திரத்திலும் குளிக்கும்
    கோவணமில்லா நீங்களெல்லாம் சமூகத் தலைவர்களா?
    உங்களை தலைவர்களாக்கிய தரம் கெட்ட தலைவர்களெல்லாம்
    சமுதாயத்தை வழிநடாத்த தகுதி உள்ளவர்களா?
    மக்கள் தலைவர் அஷ்ரப் கற்றுத் தந்த
    அழகிய தலைமைத் துவப்பண்புகள் இதுதானா ?
    கேவலம்...!
    உங்கள் அசிங்கமும் நாற்றமும் ஊர்களில் மட்டுமில்லாமல்,
    வெளி ஊர்களிலும் கொழும்பிலும் திருமலையிலும் நாற்றம் எடுத்து நாறிக் கொண்டிருப்பது
    எங்கே உங்களுக்கு புரிய போகிறது ?
    மது வெறியும் மங்கைகளின் மயக்கமும் உங்களை விட்டு
    இன்னும் தெளிய வில்லையா?
    சீ.....! சாக்கடைகளில் கிடந்து உழன்ற நீங்களெல்லாம்
    எங்கள் சமூகத்தைக் காக்க வந்த தலைவர்களா?
    பாவம்...! பதவிகளுக்கும் பணத்துக்கும்
    மறைமுகமாக படுகுழி வெட்டி
    சதி செய்த சண்டாளர்களே...!
    நீங்கள் அஷ்ரப் தலைவரின் அடியொற்றி வந்த
    ஆளுமையுள்ள அறங்காக்கும் அர்த்தமுள்ள தலைவர்களா?
    குடிகார பயல்களே..!
    உங்களுக்கு வெட்கம், மானம் இல்லையா?
    ஒழுங்காக ஒரு மொழியில் அழகாக பேச முடியாத
    உங்களிடம் ஒழுக்கமும் பண்பும் எப்படி வரப் போகிறது?
    பரதேசிக் கூட்டங்களாக அலைந்து திரியும் ஆடுகளையும்
    அறிவில்லாத மாடுகளையும் எமாற்றி
    எவ்வளவு காலத்துக்கு நீங்கள் ஏமாற்றப் போகிறீர்கள்?
    அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்.
    அவன் கருணை உள்ளவன்.காலத்தை வென்றவன்.
    உங்கள் நெஞ்சங்களை தொட்டுக் கேளுங்கள்.
    நீங்கள் எல்லோரும் முஸ்லிம் சமூகத்துக்கு
    தலைமை தாங்க தகுதியானவர்களா?
    நீங்கள் எங்கிருந்து இந்தப் பதவிகளுக்கு எப்படி வந்தீர்கள் ?
    என்பது நீங்கள் மறந்தாலும் உங்கள் சாக்கடைகள்
    சொல்லிக் கொண்டே இருக்கும்.
    நான் ஒரு இனவாதியும் அல்ல. பித்துப் பிடித்த
    பிரதேச வாதம் பேசும் பேயனும் அல்ல.
    நான் உண்மையான காங்கிரஸ் வாதி.
    தலைவர் அஷ்ரபின் அன்புக்குரிய ஈமான் தாரி.

    அல்லாஹ்வையும் அவன் தூதர்
    - எஸ். முத்துமீரான்-
    From Face book.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நான் ஒரு ஈமான்தாரி. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top