சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ 104
கோடிகளைக் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இனி இப்படியொரு சாதனையை
வேறு எந்த இந்தியப் படமாவது நிகழ்த்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் நேற்று உலகெங்கும் வெளியானது. இதுவரை உலக
சினிமா பார்த்திராத ஆர்ப்பாட்டமான ஓபனிங்குடன் வெளியான கபாலி, பிரிமியர்
காட்சிகள் மூலம் மட்டுமே ரூ 25 கோடி வரை குவித்துவிட்டது.
இப்போது முதல் நாள் காட்சிகள் மூலம் வசூலான தொகை விவரங்கள் கிடைத்துள்ளன.
இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் ரூ 24.8 கோடியைக் குவித்துள்ளது. இதுவும் இதுவரை எந்தப் படமும் செய்யாத சாதனைதான்.
0 comments:
Post a Comment