• Latest News

    July 23, 2016

    ஒலுவில் அழிவிற்கு தீர்வு வேண்டும் :மாகாண சபையில் அமைச்சர் நசீர்

    சப்னி அஹமட் -
    அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தின் அழிவிற்கு உடனடியாக தீர்வு வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடைத்தை மற்றும் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீர் நேற்று முன்தினம்(21) கிழக்கு மாகாண சபையில் தெரிவித்துள்ளார். 

    நேற்று 21 கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏல்.எம். தவம் அவர்களினால் கொண்டுவரப்பட்ட ஒலுவில் பிரதேசத்தின் அழிவு பற்றிய அவசர பிரரேணைக்கு பதில் வழங்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

     அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்; .

    ஒலுவில் கடலறிப்பு பிரச்சினையானது கால காலமாக அதிக பிரச்சினைக்குறிய ஓர் விடையமாக உள்ளதால் உடனடியாக இதற்கு ஓர் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமைப்பாடு எம்மிடம் உள்ளது. குறிப்பாக இந்த ஒலுவில் துறைமுகத்தின் திட்டத்தில் ஏற்பட்ட  பிழையின் காரணமாகவே குறித்த அழிவு ஏற்படுவதற்கு முக்கிய பங்கை வகிகின்றது என்றுதான் கூறலாம். 

    அன்றைய நாட்கள் இந்த ஒலுவில் துறைமுகத்தை சிறந்த முறையில் திட்டமிட்டு மேற்கொண்டிருந்தால் இன்றைய இந்த அழிவு விவகாரம் வரக்கூடிய வாய்பே இருந்திருக்க மாட்டாது. இந்த கடலறிப்பு விவகாரம் இன்னும் சில வாரங்களில் அன்மித்த பிரதேசங்களை தாக்கி அந்த பிரதேசத்தையே அழிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இன்று காணப்படுகின்றது. 

    ஆகவே உடனடியாக குறித்த ஒலுவில் பிரதேசத்திற்கு நமது மாகாண சபையின் குழு விஜயம் ஒன்றை மேற்கொண்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க அனைவரும் முன்வரவேண்டும்.

    மேலும், இந்த பிரச்சினையை இன்னும் அதிகரிக்க நான் அந்த பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதி என்றவகையில் விரும்ப வில்லை . இதற்கு இன்றே ஓர் தீர்வினை பெற்றுக்கொடுக்க துறைமுக அதிகார சபையோ, கரையோர பாதுகாப்புத் திணைக்களமோ அல்லது இதற்குறிய அமைச்சுக்களோ கண்டுகொள்ளமால் இருப்பதை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம். இவர்கள் உடனடியாக தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்பதையும் இந்த சபையில் தெரிவித்துக்கொள்கின்றோன் என்று  அமைச்சர் அங்கு உரையாற்றினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒலுவில் அழிவிற்கு தீர்வு வேண்டும் :மாகாண சபையில் அமைச்சர் நசீர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top