
அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வதற்காக இனவாதத்தை
தூண்டிவிடுவதற்கும், இவ்வாறான சம்பவங்களை பயன்படுத்தி அரசியல்
இலாபமடையும் இனவாதிகளுக்கு உத்வேகமளிப்பதுமாகவே இந்த
மோதல் சம்பவம் அமையுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 23இன் கீழ் 2
ஆம் இலக்க நிலையியல் கட்டளையின் கீழ் யாழ். பல்கலைக்கழகத்தில்
கடந்த சனிக்கிழமை தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற
மோதல் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
அநுரகுமார மேலும் தெரிவிக்கையில்,
யாழ். பல்கலைகக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் புதிய
மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை
நடைபெற்றபோது சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்
நிலைமை காரணமாக சில மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்க வேண்டி ஏற்பட்டிருந்தது.
இது பல்கலைக்கழகமொன்றில் இடம்பெற்ற சாதாரண மோதல்
சம்பவமொன்றல்ல. அரசியல் மற்றும் சமூக ரீதியாக பாரதூரமான அபாய
எச்சரிக்கையொன்றை ஏற்படுத்தும் வகையில் இரு இனக்குழுக்களை
பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களிடையே உருவான
சம்பவமொன்றென்பதை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சமூகம்
என்ற வகையில் கண்டிக்கத்தக்க மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய
இனவாதத்தின் நச்சுத்தன்மையை இந்த சம்பவத்தின் பின்னணியில்
காணமுடியும்.
குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள
மாணவர்கள் மீது தமிழ் மாணவர்கள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட
தாக்குதலானது வடக்கில் வளர்ந்து வரும் இனவாத மனோபாவத்தின்
தொடர்ச்சியாகும். இந்த நிலைமையானது அனைத்து இனவாதிகளுக்கும்
உத்வேகத்தை அளிக்கும். தங்களது அரசியலுக்காகவும் எப்படியாவது
அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ளும் நோக்கத்திற்காகவும் செயற்பட்டுக்
கொண்டிருக்கும் இனவாதிகளுக்கும் இது உத்வேகமளிப்பதாகவே
அமையும்.
எந்தவொரு இனவாதமும் அந்நியோன்ய ரீதியால்
ஒன்றிலொன்று தங்கியிருக்கும். எந்த இனவாதமும் அதன் எதிராளி
இனவாதத்துக்கு மறைமுகமாக உதவிபுரிவதாகவே இருக்கும். அதேபோல்,
இனவாதமொன்றை இன்னுமொரு இனவாதமொன்றினால் இல்லாமல் செய்ய
முடியாது.
இவ்வாறான சிறியளவில் உருவான சம்பவங்களானவை பாரிய
யுத்தமொன்றை ஏற்படுத்த ஏதுவாக அமைந்திருந்தன என்பது அண்மைய
வரலாற்று சம்பவங்களின் மூலம் எமக்கு புலப்பட்டுள்ளது. அந்த வகையில்,
இந்த சம்பவமானது வெறுமனே மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட
மோதலொன்றாக கருதி சட்டத்தின் முன்னிலையிலோ அல்லது ஒழுக்காற்று
விசாரணையொன்றின் மூலமோ காலத்தினாலோ முடிவுக்கு வந்துவிடும் என்று
கருதிவிட முடியாது.
இந்த மோதல் தொடர்பிலான விசார ணைகளின் முன்னேற்றம் என்ன?,
சம்ப வத்துடன் சம்பந்தப்பட்ட காரணங்கள் மற்றும் பெறுபேறுகளை அடையாளம்
கண்டுகொள்வதற்கு விசாரணை குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளதா?, அவ்வா றெனில்
அந்த குழுவின் பரிந்துரை என்ன?, இவ்வாறான சம்பவங்களை தவிர்த்துக்
கொள்வதற்காக அரசாங்கத்திடமுள்ள வேலைத் திட்டம் என்ன? ஆகிய கேள்வி களுக்கு
அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் களை எதிர்பார்க்கின்றோம் என்றார்.
0 comments:
Post a Comment