2017 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவு திட்டம் எதிர்வரும்
நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதற்கான நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் யோசனைக்கு
அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சர்
கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
இதன்பிரகாரம் அடுத்த ஆண்டில் 6 வீத பொருளாதார
வளர்ச்சி வேகத்தை அடைந்து கொள்வதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். மேலும்
17 அபிவிருத்தி இலக்குகளை 2030 இல் பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த
ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்
கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையி லேயே அமைச்சர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் கயந்த கருணாதிலக மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள நடுத்தர
இலக்கான பத்து இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கல், வருமானத்தை
அதிகரித்தல், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, காணி உரிமைகளை
உறுதிப்படுத்தல் உள்ளிட்ட 17 அபிவிருத்தி இலக்குகளை 2030 ஆம்
ஆண்டிற்குள் அடைந்து கொள்ளும் வகையில் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு –
செலவு திட்டத்தை தயாரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேசிய உற்பத்தியினை 2020 ஆம் ஆண்டளவில் 3.5 வீதமான
மட்டத்திலும், அரச கடன் விகிதத்தை 68 வீதமாகவும் கொண்டு வருதல்
பொருளாதார இலக்காகும். அந்த இலக்கை அடைந்து கொள்ளும் வகையில் 2017 ஆம்
ஆண்டில் 6% பொருளாதார விருத்தி வேகத்தை அடைந்து கொள்வதற்கும் மொத்த
தலா தேசிய உற்பத்தியில் 5% இனை அரச முதலீடுகளின் மூலம்
உறுதிசெய்து கொண்டு தலா தேசிய உற்பத்தியில் 4.7% இனை வரவு –செலவு
திட்ட தட்டுப்பாடு ஏற்படும் விதத்தில் 2017 ஆம் ஆண்டு வரவு–செலவு
திட்டத்தினை தயாரிக்கவுள்ளோம். இதன்படி அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவு
திட்டம் நவம் பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றார்
0 comments:
Post a Comment