• Latest News

    July 30, 2016

    சாித்திர வெற்றி சிலரால் சகிக்க முடியாது போனது ஏன்?

    குமார் சுகுணா –
    கபாலி உலகம் முழு­வதும் மிக பெரிய எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு இடையே வெளி­யாகி சாதனை வெற்­றி­யுடன் ஓடிக்­கொண்­டி­ருக்­கி­றது.ஆனால் இது வரை தமிழ் சினி­மாவில் எந்த திரைப்­ப­டமும் சந்­திக்­கா­த வகையில் எதிர்­பா­ரா­த எதிர்­ம­றை­யான விமர்­ச­னங்­களை சந்­தித்­து வரு­கின்­றது.
    திரைப்­படம் ஒன்று வெளியானால் அது நல்ல படமா அல்­லது இல்லையா என்­பது ஒரு ரசி­க­னின் பார்வையை பொறுத்­தது. கதை­யே இல்­லாத படங்­களை கூட வெற்­றி­ய­டைய வைப்­பவன்தான் ரசிகன். அதே­போல கபா­லி இது­வரை நாம் பார்த்த ரஜினி படம் போல இல்லை என்று அந்த மாற்­றத்தை ரசிக்­கலாம் அல்­லது ஏற்­றுக்­கொள்­ளாமல் போகலாம். கேங்ஸ்டர் படம் என்றதும் வழக்கமான பாட்ஷா, தளபதி, பில்லா போன்றோ அல்லது பிர­மாண்­ட­மான சிவாஜி, எந்திரன் போன்ற திரைப்­ப­டமாக இருக்குமென ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து அது கபாலி திரைப்­ப­டத்தில் இல்லை என்பது வேறு. இது ரஜினி ரசி­கர்­களின் பிரச்­சினை.
    ஆனால், அதையும் தாண்டி இந்­தப்­படம் விமர்­ச­னங்­களை மட்­டு­மல்ல எதிர்ப்­பு­க­ளையும் சந்­தித்­துள்­ளது. இது வரை நாம் பார்த்­தி­ராத ஒரு புதிய கோணத்தில் ரஜினி. ஆனால் ரஜி­னியின் எந்த திரைப்­ப­டத்­துக்கும் இல்­லாத அளவில் எதிர்­ம­றையான வன்­ம­மான விமர்­ச­னங்கள் கபா­லிக்கு மட்டும் ஏன்.. என்­பதே அனை­வ­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது. சமூக வலைத்­த­ளங்கள் மட்டும் அல்ல இந்­திய முன்­னணி ஊட­கங்கள் கூட மிக கடு­மை­யாக கபா­லியை விமர்­சித்­தி­ருந்­தன. அதற்கு காரணம் இயக்­குநர் ரஞ்­சித்தை தவிர வேறு எது­வு­மாக இருக்க முடி­யாது.
    இது­வரை ரஜினி படம் என்­றால் டூயட், பிரமாண்ட கலை­ஞர்கள், பிர­மிக்க வைக்கும் சண்டை காட்­சிகள் இருக்கும். ஆனால், இத்­தி­ரைப்­ப­டத்தில் பிரித்தானிய ஆட்­சிக்­கா­லத்தில் இந்­தி­யாவில் இருந்து கொத்­­த­டி­மையாக மலே­சிய இறப்பர் தோட்­டங்­க­ளுக்கு வர­வ­ழைக்­கப்­பட்ட சமூகத்தில் உள்ள ஒருவர் அந்த மக்­க­ள­து ­பி­ரச்­சி­னைக்­காக ஒரு சாதா­ரண டான் ஆவதே கதைக்களம். இது­வரை இந்­தி­யாவில் உள்ள தமி­ழர்­களை மட்­டுமே சுற்றி சுற்றி எடுக்­கப்­பட்ட சினி­மாவின் கதைக்களம் இங்கு மாறி­யு­ள்­ளது. அது­மட்டுமல்ல கொத்­த­டி­மை­க­ளாக சென்­ற­வர்கள் தமி­ழ­கத்தில் சாதி ரீதி­யாக ஒடுக்­கப்­பட்ட மக்கள். இந்த திரைப்­படம் ஒடுக்­கப்­பட்ட மக்­களின் குர­லாக ஒலித்­த­மையே இத்­தனை எதிர்­மறை விமர்­ச­னங்­­க­ளுக்கும் கார­ண­ம் என்ற நிதர்­சனம் தற்­போது எல்­லோராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டு­விட்­டது.
    தேவர்மகன், சின்­னக்­க­வுண்டர் போன்ற திரைப்­ப­டங்­கள் வெளியான போது சாதியம் பற்றியோ சமூக ஏற்­றத்­தாழ்­வுகள் பற்றியோ யாரும் பேச முன்­வரவில்லை. ஏனெனில் அது சமூக கட்­ட­மைப்பில் பொரு­ளா­தாரம் உட்­பட ஒரு உயர்நிலையில் உள்ள சமூ­கத்தை பிர­தி­ப­லிப்­பது. உலகம் ஒரு­வ­னுக்கா என்ற பாடலை எதிர்ப்­­போர் போற்­றிப்­பா­டடி பொண்ணே.. தேவர் காலடி மண்ணே... என்ற பாடல் வெளியா­ன­போது ரசித்த­வர்­கள்தான். ஆனால், கபா­லி­யை சாதிய ரீதி­யாக பா­ர்ப்­ப­தோடு இந்­திய தமிழ் ஊட­க­ங்கள் இது தலித் சினி­மாவா என்று விவாதம் செய்து கொண்­டி­ருக்­கின்­றன.
    சமூ­கத்தில் உள்ள பல பிரச்­சி­னை­களை வெளிக்கொணர்­வதில் சினிமாவை விட பெரிய ஊடகம் எதுவும் இருக்­க­மு­டி­யாது. இங்கு ஏழை, பணக்­கா­ரன், சாதிபேதம், மதம் என்று எந்த விதத்­திலும் பிரித்­துப்­பார்க்க முடி­யாது. எந்த விடயமும் அது பேசு­ப­­வர்­களுக்கு ஏற்ப தரம் உயரும். தமி­ழ­னின் மன­தில் சிம்­மா­சனம் இட்டு ரஜினி எனும் காந்த சக்தி ஒடுக்­கப்­பட்டவர்­களின் குர­லாக ஒலிக்கின்­றது.. இது­வரை எஜ­மா­னா­க திரையில் வந்த ரஜினி இத்­தி­ரைப்­ப­டத்­தில் பண்ணை அடி­மை­க­ளா­க இருந்த ஒரு சமூ­கத்தின் நாய­க­னாக மாறி­யுள்ளார்.
    இந்­தி­யாவில் இருந்து ஆங்­கி­­லே­யர்­களின் ஆட்சிக்­கா­லத்தில் தேயிலை தோட்­டங்­க­ளிலும் இறப்பர் தோட்­டங்­க­ளிலும் வேலை செய்­­வ­தற்­காக அடி­மை­க­ளாக மக்கள் அழைத்து செல்­லப்­பட்­டனர். மிக கொடூ­ர­மான அடிமை வாழ்­க­்கையை அந்­த மக்கள் வாழ்­ந்த­னர். இலங்­கையில் கூட இன்றும் தேயிலை தோட்­ட­ங்­களில் வாழும் இந்­திய வம்­சா­வளி மக்கள் ஒரு அடி சொந்த நிலத்தை கூட பெற­மு­டி­யாத நிலை­யி­லேயே உள்­ளனர். ஆனால் இப்­படி ஒரு சமூகம் இருப்­ப­து என்­பது தமி­ழக அர­சியல் தலை­மை­க­ளுக்கு தெரி­யுமா என்­பது கேள்­விக்­கு­றியே.
    இதே­போ­லத்தான் மலே­சிய இறப்பர் தோட்­ட­ங்க­ளுக்கு கொத்­த­டி­மை­களாக சென்ற மக்­களும் பல்­வே­று இன்­னல்­களை சந்­திக்­கின்­றனர். ஆனால், தேசம் மாறி­னாலும் அவர்­க­ளது வாழ்க்கை முறையோடு பின்­னி­யு­ள்ள சாதிய ஏற்­ற­த்தாழ்­வுகள் குறை­ய­வில்லை. அங்கு ஏனை­ய சமூ­கங்­க­ளுக்கு இடையே எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­கள். போதைக்கு அடி­மை­யாகி தமது வாழ்க்­கையை தொலைக்கும் இளை­ஞர்கள் என்ற யதார்த்த பிரச்­சி­­னை­களை வெளிக்கொணர்­வ­தற்கு இது­வரை யாரும் முயற்­சித்­தது இல்லை. ஆனால் கபாலி அதனை பற்­றியே கள­மாக மாறி­யி­ருக்­கின்­றது. ஏதோ ஒரு காலத்தில் பொரு­ளா­தார ரீதியில் பின் தங்­­கி­யி­ருந்­தி­ருந்தோரே ஒடுக்­கப்­பட்­ட­வர்களாக ஆக்­கப்­பட்­டு­ள்­ளனர். ஆனால் அவர்கள் அதே நிலையில் இருக்க வேண்­டும் என்­பது ஒன்­றும் தலை­விதி இல்­லையே. இதைத்தான் ரஜினி மூல­மாக கபாலி பேசு­கி­ற­து, ''காந்தி வேட்டி கட்­டு­ன­துக்கும் அம்­பேத்கார் கோட்சூட் போட்­ட­துக்கும் அர­சியல் இருக்­கு...'', ''எங்கிருந்து வந்தீர்கள் என்ற கேள்விக்கு, ‘’திண்டிவனம் பக்கத்திலுள்ள கிராமத்தில் பண்ணை அடிமையால் பாதிக்கப்பட்டு இங்கு வந்தோம்” என்பது பண்ணையடிமை என்பது தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவிய சாதிய கொடுமைகளின் அடையாளம் என்பதை காட்டுகிறது.
    ''நாம் என்ன உடை போடவேண்டும் என்பதை யாரோ ஒருவன் எப்படி தீர்மானிக்க முடியும்.'' இறுதியில் கிஷோர் பேசுவது, ‘’யார்றா நீ.. வெறும் சோத்துக்காக இங்க வந்தவன்தானே.. தின்னுட்டு அமைதியா இருக்கவேண்டியதுதானே.. மத்தது எல்லாம் எதுக்கு நீ செய்ற.. செய்றதுக்கு நீ யாரு.. அதெல்லாம் பிறப்பிலேயே இருக்குடா.. உனக்கு என்ன தகுதி இருக்கு… கோட்டு, சூட்டு, கண்ணாடி போடா சமமா ஆயிடுவியா” போன்ற வசனங்கள் சமூ­கத்தில் அடுக்­கு­மு­றை­க­ளுக்கு உள்­ளா­ன­வர்கள் அதே­நி­லை­யி­லேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற மேல் வர்க்­கத்­துக்கு சவுக்­க­டி­யாக மாறி­யுள்­ள­மையே இந்த விமர்­ச­னங்­க­ளுக்கு காரணம்.
    மேலும் இந்தக் கபாலி படம் வழக்கமான ரஜினி படங்களைப்போல் இல்லாததுடன் அம்பேத்கர் அரசியலை குறிப்பாக இயக்குநர் ரஞ்சித் ரஜினி மூலமாக ஒடுக்­க­ப்­பட்­ட­வர்­களின் குரலாக மாறி­யி­ருப்­ப­துதான் பெரும்பாலானோருக்கு எரிச்சலை ஏற்­ப­டுத்­தியுள்ளது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் பலவாறாக புலம்புகின்றனர்.
    இந்­­திய ஊட­கங்கள் சமூ­க­ வ­லைத்­த­ளங்கள் என்­பன இத்­தி­ரைப்­ப­டத்தை விமர்சித்­தி­ருப்­பது கூட பர­வா­யில்லை. ஆனால் 5 முறை தேசிய விருதை பெற்ற பெரும் கவிஞர் வைர­முத்து வஞ்­சித்­துள்­ள­மைதான் மிக மோச­மா­ன­ வன்­ம­ம். சமத்­துவம் சமூகம் என்றெல்லாம் பேசும் வைர­முத்­து அரிமா சங்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது 'கபாலி'' குறித்து கிண்டலடித்ததோடு, அந்தப் படத்தை தோல்விப் படம் என்று கூறியுள்ளார். கபாலிக்கு முன்னாடி கோட் போட்டது நீங்கதான்னு நினைக்கிறேன். உங்களைப் பார்த்துதான் ரஜினிக்கு கோட் போட்டு ரஞ்சித் கபாலியை எடுத்துட்டாரு. நான் புரிந்து கொள்கிறேன் ஒவ்வொருவரையும், இந்தக் கூட்டத்தை, வந்திருக்கிற பெருமக்களை, அரசியலை, விஞ்ஞானத்தை, இல்லறத்தை, வாழ்வியலை, ஆணை, பெண்ணை, தொலைந்து போன விமானத்தை, கபாலியின் தோல்வியை (இரு முறை).... சாதிகள் இல்­லை­யடி பாப்பா என்று பாரதியின் மண்ணில் பிறந்த வைர­முத்­துவின் இந்த பேச்சு அவ­ரது தரத்தை தாழ்த்­து­வ­தாக மாறிவிட்­டது. சாதிய அர­சி­ய­­லில் உடை என்­பது எத்­தனை முக்­கி­ய­மா­னது என்­பதை கபாலி விளக்­கி­யி­ருக்­கின்­றது.
    ஒரு மனி­தனை மதிப்­பிப்­பதே உடைதான். சாதா­ர­ண­மா­ன­வர்கள் கோட் சூட் போட கூடாது என்ற மர­பில்­லையே. ஆனால் மாபெரும் கவி­ஞ­ரான வைர­முத்து இதனை மிக மோ­ச­மாக விமர்சித்­தமை ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒன்று. ஆனால் வைர­மு­த்­துவின் இந்த பேச்­சுக்கு எதி­ராக எழ­ுந்த எதிர்ப்­பு­களின் கார­ண­மா­க தான் பேசும் போது ஒரு வார்த்தை விடு­பட்­டு­விட்­ட­தா­கவும் இதனை பெரி­து­ப­டுத்தி சர்ச்சை ஏற்­ப­டுத்த வேண்டாம் என்று கோரி­யுள்ளார். இது நம்ப கூடி­ய­தாக இல்லை.
    வைரமுத்துவின் இவ் விமர்சனம் குறித்து கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பதிலளித்த போது, வைரமுத்துவுக்கு ஏன் இத்தனை கோபம் என்பது புரிகிறது.
    அவருக்கு பாட்டெழுத வாய்ப்பளித்தி ருந்தால் ஓஹோ என்று புகழ்ந்திருப்பார். ஆனால் வாய்ப்புத் தராததால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். கபாலியில் வாய்ப்புத்தர முடியாத சூழல். இதெல்லாம் புரியாமல் அவர் விஷம் கக்கி இருக்கிறார். கபாலியை தோல்விப் படம் எனும் இவர்தான், அந்தப் படத்துக்கு முதல் நாளில் 4000 டிக்கெட்டுகளை வாங்கிச்சென்றார். ஒரு நயா பைசா நான் வாங்கவில்லை. யார் என்ன சொன்னாலும் கபாலி வெற்றியைத் தடுக்க முடிந்ததா?
    இன்று அது மாபெரும் வெற்றிப் படம். மக்கள் தந்துள்ள வரவேற்பு மலைக்க வைக்கிறது. இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை பார்த்திராத வெற்றி இது என்றார். அது உண்­மைதான் இத்­தி­ரைப்ப­டத்­துக்கு பல்­வேறு எதிர்­­மறை விமர்­ச­னங்கள் வந்­தா­லும் ரஜ­ினியின் எந்த திரைப்­ப­டமும் இது­வரை எட்­டாத வகையில் வசூலை குவித்துக் கொண்­­டி­ருக்­கி­ற­­து. திரைப்­படம் வெளியாகியதும் சமூக வலைத்­த­ளங்­­களும் இந்­திய ஊட­கங்­களும் கடு­மை­யாக இயக்­குநர் ரஞ்­சித்தை சாடின. அவர் தலித் அர­சியல் செய்­வ­தா­கவும் இனி அவர் ரஜினி திரைப்­ப­டங்­களை இயக்க கூடாது என்றும் ஊட­கங்கள் விமர்­சித்­தன.
    இந்­நி­லையில் இது தொடர்­பில் இயக்­குநர் ரஞ்­சித் தெரி­வித்த கருத்­துக்­க­ளா­ன­து, படம் பற்றி விமர்சனம் செய்யுங்கள். என்னை சாதி ரீதியாக விமர்சனம் செய்வது ஏன்? தேவர்­மகன், சின்­னக்­க­வுண்டர் போன்ற திரைப்­ப­டங்கள் வரும் போது அது தேவ­ருக்­கான படம் என்றோ கவுண்­ட­ருக்­கான படம் என்றோ கூறா­த­வர்கள், கபா­லியை தலித் சமு­தாய மக்­க­ளுக்­கான படம் என்று கூறு­வது ஏன் என்­பதும் ரஞ்­சித்தின் கேள்வியாக உள்ளது. இது தலித் படமல்ல. இது ஒரு படம். தேவர் மகன், சின்னக் கவுண்டர் படங்கள் வரும் போது இது மாதிரியான கேள்விகள் எழவில்லை. இப்போது ஏன் தலித் படம் என்று கூறுகிறீர்கள். இது தலித் படமல்ல .
    கபாலி என்ற பெயர் வில்லன்களுக்கு மட்டுமே இருந்தது. அதை ஒரு ஹீரோவிற்கு வைத்தேன். இன்றைக்கு கபாலி என்ற பெயர் வைத்தவர்கள் எல்லாம் பெருமையுடன் தங்களின் பெயரை கூறுகின்றனர்
    அடி­மைப்­ப­டுத்­து­ப­வர்கள் ஒடுக்­கப்­பட்­ட­வர்கள் என்றால், ஒடுக்­கு­ப­வர்­களும் அவர்­க­ளும்தான் அந்தப் பிரச்­சி­னைக்கு உரி­ய­வர்கள். அவர்கள் அமர்ந்து பேச வேண்டும். உரை­யாட வேண்டும். இது எல்லாத் தரப்­பிலும் நடக்க வேண்டும். அதைத்தான் நான் சொல்ல விரும்­பு­கிறேன். ஒருவன் சொல்ல, இன்­னொ­ருவன் கேட்­பது என்­பது கூடாது. உரை­யாடல் நடை­பெற வேண்டும்.
    தமி­ழர்கள் எங்கே போனாலும் ஒடுக்­கு­மு­றைக்கு ஆளா­கின்­றனர். மலே­சி­யாவில் ஜாதி சங்­கங்கள் அதிகம் இருக்­கின்­றன. தமி­ழர்கள் அதிக அளவில் ஒடுக்­கப்­ப­டு­கிறார்கள் என்­ப­தைத்தான் இந்தப் படத்தில் கூறி­யி­ருக்­கிறேன். தமி­ழர்கள் எங்கே போனாலும் ஜாதிய ஒடுக்­கு­மு­றைக்கு ஆளா­கின்­றனர். எனக்கு தமிழின் மீது ஆர்வம் அத­னா­லேயே என்னை பா.ரஞ்சித் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறேன். மலேசியா நாட்டு கதைக்களத்தில் எடுக்கப்பட்ட படம் என்றாலும், முழுமையான யதார்த்த படம் இல்லை.
    நான் கோட் சூட் போடுவேண்டா... நான் கால் மேல் கால் போட்டு அமருவேன்... நான் ஆளப்பிறந்தவன்டா போன்ற வசனங்கள் வைக்கப்பட்டதற்கு பதிலளித்த ரஞ்சித், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வரும் ஒருவர் அணியும் உடை, பேசும் வசனம் அவசியமான இருந்தது என்றார். தமிழ் சமூகம் ஒடுக்கப்பட்ட சமூகம். மலேசியா தமிழர்களின் சூழ்நிலை வேறு. சீனர்கள், மலாய்காரர்கள் நிறம் வெண்மை. தமிழர்கள் கறுப்பர்கள் என்ற தாழ்வு இருக்கிறது. இந்த கதை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கு கனெக்ட் ஆகணும்.
    கபாலி பார்த்து விட்டு நிறைய திட்டுகிறார்கள். கபாலியைப் பற்றிய விமர்சனங்கள் கூர்மையாக இருக்கிறது. ரஜினி படத்தை ரஞ்சித் இயக்கக் கூடாது என்று முன்னணி பத்திரிகையும் கூறியுள்ளது. எனக்கு இது முன்பே தெரியும். மெட்ராஸ் பார்த்து விட்டுதான் ரஜினி கூப்பிட்டார். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார். படம் பற்றி விமர்சனம் செய்யுங்கள். என்னை சாதி ரீதியாக விமர்சனம் செய்வது ஏன்? இதில் நான் அரசியல் செய்யவில்லை
    மக்­க­ளு­டைய பிரச்­சி­னையை சொல்­வ­துதான் சினிமா. கலையை அர­சியல் ஆக்க நினைக்­கிறேன் இது அர­சியல் பட­மல்ல... கலையே அர­சி­யல்தான். கேட்­கிறேன் படத்தின் கிளை­மேக்ஸை இப்­படி வைக்கச் சொன்­னதே ரஜி­னிதான். அமெ­ரிக்­காவில் இருந்து பேசி என்னை கன்வின்ஸ் செய்தார். என்னை சுதந்­தி­ர­மாக விட்டார். உலகம் முழு­வதும் ஹிட். 30 நாடு­களில் படம் வெளி­யாகி உள்­ளது. எதிர்­ம­றை­யான விமர்­ச­னங்கள் சுய­ஜாதி பெரு­மையை பேச­வில்லை. ஒட்­டு­மொத்த மானுட பிரச்­சி­னையை பேசு­வ­துதான். என்னை ஆள்­ப­வ­னிடம் இருந்துதான் விடுதலை கேட்கிறேன்.
    மலே­சி­யாவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யில்­லாத சிக்கல் உரு­வா­கக்­கூ­டாது என்­றுதான் நிறைய விட­யங்­களை இப்­ப­டத்தில் நான் பேசவில்லை. கபாலியில் இருக்கும் சிந்தனைகள் அனைத்துமே சமூகத்தின் மீது இருக்கும் அக்கறை தான். இந்த சமூகம் மாறுவதற்கு மேலும் சில விடயங்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். மக்கள் அனைத்து தரப்பு படங்களையுமே பார்ப்பார்கள்.
    கபாலி போல தொடர்ந்து படம் எடுப்பேன். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைச் சொல்லும் படங்களைத் தொடர்ந்து எடுப்பேன். மக்களின் பிரச்சினைகளைச் சொல்ல வேண்டும். எனவே தொடர்ந்து செயற்படுவேன்.
    என் மீதான தனி நபர் விமர்சனமும், காழ்ப்புணர்ச்சி கொண்ட வசைகளும் நான் சரியான பாதையில்தான் செல்கிறேன் என்பதை எனக்கு உணர்த்துகின்றன. எனக்கு எந்த பாரம்பரியமும் கிடையாது. கலாசாரமும் கிடையாது, இதுதான் நான்... இப்படித்தான் என் படங்கள் இருக்கும், என தெரி­வித்­துள்ளார்.
    உண்மையில் இலஞ்­சம், ஊ­ழல்-­, வாக்கு அர­சியல் என பொது­வான வணிக விற்­ப­னைக்கு போது­மான மசா­லத்­த­னங்­களை மட்டும் மையப்­ப­டுத்தி இப்­படம் எடுக்­கப்­பட்­டி­ருந்தால் எல்­லோரும் ரஞ்­சித்தை தூக்­கி­வைத்துக் கொண்­டா­டி­யி­ருப்­பார்கள்.
    சாதிய சமூக அர­சி­யலைப் பேசு­வதால் அதுவும் திரைத்­து­றையில் நட்­சத்­திர முக­மான ரஜினி மூல­மாக பேச­வைத்­ததில்.. தாங்­கிக்­கொள்­ள­மு­டி­யாமல் எதிர்ப்பினை முன்வைக்கின்றனர். சாதி என்ற ஒன்­றுக்­காக ரயில் பாதை ஓரங்­க­ளிலும் மக்கள் சன­மாட்டம் நிறைந்­த இடங்­க­ளிலும் உயிர்கள் அரிவாள் வெட்டில் சாய்க்­கப்­ப­டு­கின்­ற­மையும் மாடை வெட்­டினான் என்று மனி­தனை வெட்­டு­வதும் என்ன மனிதம் என்று தெரி­ய­வில்லை. ஒரு சமூகத்துக்கு தேவை மாற்று சினிமா இல்லை. மக்­களின் உள­வியல் மாற்­றமே என்­பது இயக்­கு­ந­ர் ரஞ்­சித்­து­க்கு நன்­றா­கவே தெரிந்­தி­ருக்கும். அவர் சமூக மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முனை­ய­வி­ரும்­ப­வில்லை. அது சினி­மாவால் முடி­யாது என்று அவரே பல­முறை கூறி­யுள்ளார். ஆனால் சமத்­துவம் பேசும் இந்த சமூகம் எத்­தகை­யது என்­பதை கபா­லிக்கு பின்­ன­ராக எதிர்ப்­பு­களும் விமர்­ச­னங்களும் வெளிப்ப­டுத்தி விட்­டன.
    அவர் இத­னைத்தான் எதிர்­பார்த்­தி­ருப்பார். இ தன் மூலம் ஒடுக்­க­ப்ப­ட்ட மக்க­ளுக்­கான அவ­ரது கமெரா சரி­யான முறையில் தனது பணியை செய்­துள்­ளது என்­பதே அவ­­ருக்கு கிடைத்­துள்ள மிக பெரிய வெற்றி. இதற்கு ரஜினி என்ற சக்­தியே மிக முக்­கியமானது. ஏனெனில் ரஞ்­சித்தின் முன்­னைய இரு திரைப்­ப­டங்­களும் மிக பெரிய வெற்றி படைப்­புகள் அல்ல. ஆனால், ஒடுக்­கப்­ப­ட­்ட விளிம்பு நிலை மக்­க­ளது வாழ்­வி­யலை பற்­றி­யதே.
    இத்­த­ி­ரைப்­ப­டங்­களை பார்த்­து­விட்டே ரஜினி ரஞ்­சித்தை அழைத்து இது போன்ற ஒரு மாற்று சினி­மாவில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பையும் சந்­தர்ப்­பத்தையும் இயக்கும் வாய்ப்பையும் அளித்­துள்ளார். சிக­ரெட்டை பிடித்­துக்­கொண்டு புகை மூட்­டத்தில் நிற்­பது மட்டும் அல்ல சும்மா நின்­னாலே ரஜினி ஸ்டைல்தான். பஞ்ச் வசனம் பேச வேண்­டி­யதும் இல்லை. ரஜினி எதை பேசினாலும் அது பஞ்தான் என்­பது எல்­லோ­ருக்கும் தெரியும்.. இத்­தி­ரைப்­ப­டத்தை பார்த்­த­வர்­க­ளுக்கும் புரியும். இது­வரை நாம் பார்க்­காத இயல்­பான ரஜினியை கபா­லியில் பார்த்­து­விட்டோம். ரஜினி மாறி­விட்டார்.. ஆனால்..நாம்.....?
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாித்திர வெற்றி சிலரால் சகிக்க முடியாது போனது ஏன்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top