• Latest News

    August 08, 2016

    நிந்தவூரில் ஆட்டோ விபத்து: கற்பிணித்தாய் தெய்வாதினமாக உயிர் தப்பினார்

    அப்துல் கபூர் ஆதம் -
    அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொது நூலகத்திற்கு அருகில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் பொத்துவில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதனால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

    முச்சக்கர வண்டியில் பயணித்த 04 பேரில் ஒருவர் கற்பிணித்தாய் என்பதுடன் முச்சக்கர வண்டி தலைகீழாக புரண்டபோதிலும் அவர் தெய்வாதினமாக உயிர்தப்பினார். பொத்துவில் இருந்து கல்முனை வைத்திசாலை நோக்கி பயணித்ததாக முச்சக்கர வண்டி சாரதி மேலும் தெரிவித்தார்.

    முச்சக்கர வண்டியின் சாரதியும் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிந்தவூரைச் சேர்ந்த முதியவர் ஒருவருமே காயங்களுக்குள்ளாகி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்விபத்து தொடர்பில் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் ஆட்டோ விபத்து: கற்பிணித்தாய் தெய்வாதினமாக உயிர் தப்பினார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top