ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இன்று இரவு 07.30 மணிக்கு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்த
விஜயத்தின் போது பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர்
ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில்
ஈடுபடவுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி
யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ள அவர் அங்குள்ள நலன்புரி முகாம்களிலுள்ள
மக்களையும் சந்திக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பான் கீ மூன் லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் விஷேட உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிகழ்ச்சி நிரலில் முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்கும் விடயங்களில்லை.

0 comments:
Post a Comment