• Latest News

    August 16, 2016

    சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு

    யூ.கே. காலித்தீன்-
    கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தினை கல்முனை மாநக சபையினால் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது.
    கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமதின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இவ்வேலைத் திட்டத்தின் பிரகாரம் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில்  எழுபது ஊழியர்களுடன் 02 கொம்பெக்டர்கள், 02 பெக்கோ இயந்திரங்கள், 09 உழவு இயந்திரங்கள்,01 லொறி என்பன ஒரே தடவையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு 80,000 கி.கி. திண்மக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டது.
    இத்திட்டத்திற்கு சாய்ந்தமருது பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பெரிய பள்ளிவாசல் என்பவற்றின் ஒத்துழைப்பும் பெறப்பட்டது. இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இவ் வேளைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.
    மேற்படி நிகழ்வினை மேற்கொள்வதற்கு உதவி புரிந்த கிழக்கு மாகாண முதலமைச்சர், அவரது அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதம உள்ளுராட்சி ஆணையாளர் அவர்களுக்கும் விஷேட நன்றியினை கல்முனை மாநகர சபை ஆனையாளர் ஜே.லியாக்கத் அலி தெரிவித்தார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top