சஹாப்தீன் -
இலங்கையில் ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் யாப்பு மாற்றம் பற்றி முஸ்லிம் சமூகத்தில் உள்ள பொது நல அமைப்புக்களும், தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் தமது கவனத்தை கூர்மையாக்கி அது பற்றி தங்களது கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், முஸ்லிம் கட்சிகள் தமது நிலைப்பாட்டை சொல்லாது இருக்கின்றன. முஸ்லிம் அமைப்புக்கள் வடக்கும், கிழக்கும் தனித்தனியே இருக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. தமிழ்க் கட்சிகளும், அமைப்புக்களும் வடக்கும், கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் கட்சிகள் மிக முக்கியத்துவமான அரசியல் யாப்பு மாற்றம் பற்றி கவலை கொள்ளாது வேறு செயற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
முஸ்லிம்களிடையே அதிக செல்வாக்குப் பெற்றுள்ள கட்சி என்று இன்று வரைக்கும் கருதப்பட்டு வருகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் யாப்பு மாற்றத்தில் தங்களின் நிலைப்பாடு என்னவென்று தெரிவிக்க வேண்டும். முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு மிகவும் முக்கியமாகும். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் யாப்பு விடயத்தைப் பற்றிய தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்தாமலும், கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளாமலும், கட்சியின் சொத்துக்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்காமலும் வீட்டுக்கு வீடு மரம் நடுகை திட்டத்தை கடந்த வாரம் அமுல்படுத்தியுள்ளது.
வீட்டுக்கு வீடு மரம் நடுகை திட்டம் சூழலை சமநிலைப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்யும் என்பதாக இருந்தாலும், இத்திட்டத்தின் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்க்கும் விளைவுகள் கிடைக்குமா என்பது சந்தேகமாகும். மரநடுகை மூலமாக கட்சிக்கு இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கும், மரங்களை நட்டு பாராமரிக்கும் குடும்பங்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்வதற்கும், அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக மரநடுகை பற்றி கட்சியின் பிரமுகர்கள் விளக்கும் போது தெரிவித்துள்ளார்கள்.
மேலும், அம்மரங்களை முறையாக பராமரிக்கின்றார்களா என்று பிரதேசத்தில் உள்ள மத்திய குழுக்கள் அவதானிக்க வேண்டுமென்றும் கேட்கப்பட்டுள்ளது. இது சாத்தியமற்றதாகவே அமையும். தேர்தல் காலத்தில் மாத்திரம் மக்களின் காலடிக்கு வந்து போவதற்கு பழக்கப்பட்ட அரசியல்வாதிகள் மரத்தின் வளர்ச்சியைப் பற்றி மேற்பார்வை செய்வார்கள் என்று சொல்ல முடியாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இளைஞர்களுக்கான தொடர்புகள் குறைவடைந்து கொண்டு போகின்றது. இளைஞர்களை இணைத்துக் கொள்ளவதற்கான கவர்ச்சிகரமான திட்டங்கள் இல்லாமையே இதற்கு காரணமாகும். இதனால்தான் மரநடுகை மூலமாக கட்சியில் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இளைஞர்களை மரங்களை நடுவதன் மூலமாக கட்சியோடு இணைத்துக் கொள்ளலாம் என்பது எந்தளவிற்கு வெற்றியளிக்கும் என்பது கேள்விக்குறியாகும். இன்று இளைஞர்களில் அநேகம் பேர் தொழில் வாய்ப்பின்றி இருக்கின்றார்கள். இந்நிலையில் மரங்களை நடுவதன் மூலமாக இளைஞர்களை கட்சியின் பால் இணைத்துக் கொள்ளலாமென்பது முயற் கொம்பாகவே இருக்கப் போகின்றது. நீண்ட காலமாக இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்குரிய முறையான திட்டங்கள் இல்லாமல் இளைஞர் காங்கிரஸ் மாநாடுகளை மாவட்டங்கள் தோறும் நடத்தி இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அது எதிர் பார்;த்த வெற்றியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கொடுக்கவில்லை.
மேலும், கட்சியின் கட்டமைப்பு ஏற்கனவு சீர்குழைந்துள்ளது. கட்சியின் கட்டமைப்பை சீரமைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று கட்சியின் பேராளர் மாநாடுகளிலும், மாவட்ட செயற்குழுக் கூட்டங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்த வரை உள்ளுர் மத்திய குழுக்களில் பெரும் பாலானவை முறையாக செயற்படுவதில்லை. அநேகமான பிரதேசங்களில் மத்திய குழுவின் உறுப்பினர் இரண்டுக்கு மேற்பட்ட குழுக்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுர் பிரமுகர்களிடையே போதிய ஒற்றுமை கிடையாது.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டமைப்பு நீண்ட காலமாக சீரமைக்கப்படாதுள்ளது. இது பற்றி அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பல கூட்டங்களில் பகிரங்கமாக சொல்லியுள்ளார். ஆதலால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இன்னும் செல்வாக்குள்ள கட்சியாகவும், அதிகமான இளைஞர்களைக் கொண்டதொரு கட்சியாகவும் மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கட்சியி;ன் கட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டும். இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கு கட்சியின் கொள்கை பரப்புரை செய்யப்பட வேண்டும். வேலை வாய்ப்புக்களை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் இளைஞர்களின் மூலமாகவே கட்சியை வளர்த்துக் கொண்டார். அன்று இளைஞர்களாக இணைந்து கொண்டவர்கள் இன்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களாக இருந்தாலும் அவர்கள் வயது போன ஆதரவாளர்கள் பட்டியலில் உள்ளார்கள்.
ஒரு அரசியல் கட்சியைப் பொறுத்த வரை இளைஞர்களின் பங்களிப்பு அவசியமாகும். இளைஞர்களைக் கொண்டிராத கட்சி காலவோட்டத்தில் செல்வாககு இழந்து போய்விடும். மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கு நல்ல செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால், இப்போது கட்சியில் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கும், செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கும் வீட்டுக்கு வீடு மர நடுகை வெற்றியளிக்குமா என்பது சந்தேகமாகும். ஏனெனில், ஒரு கட்சியின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கு அக்கட்சியில் ஒற்றுமை அவசியமாகும். உள்ளக முரண்பாடுகள் இல்லாதிருக்க வேண்டும். ஆனால், இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய நிலையில் காண முடியாதுள்ளது. வீட்டிற்கு வீடு மர நடுகை கூட ஒற்றுமையுடன் நடைபெறவில்லை. ஒரு பிரதேசத்தில் உள்ளவர்களே இரு குழுக்களாக பிரிந்து மரநடுகைகளில் ஈடுபட்டார்கள். அத்தோடு
கட்சியின் முக்கிய உறுப்பினர்களான செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்களும், இன்னும் சிலரும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் முரண்பட்டுள்ளார்கள். இவர்களின் முரண்பாடு கட்சியில் பிளவை ஏற்படுத்திவிடுமா என்று நினைக்கும் அளவிற்கு படுமோசமடைந்துள்ளது. இதனை சரி செய்து கொள்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கட்சியின் தலைவர், செயலாளர், தவிசாளர் ஆகியோர்களிடையே இன்னும் சந்தேகங்கள் உள்ளமையே அவர்களிடையே காணப்படும் முரண்பாடுகள் தீவிரமடைந்து கொண்டிருப்பதற்கு காரணமாகும்.
தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தற்காலிகமாக பெற்றுள்ள சிரேஸ்ட சட்டத்தரணி சல்மானிடமிருந்து அப்பதவியை மீளப் பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்காதிருப்பது கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களிடையே பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. இரண்டு வாரங்களுக்கு ஒப்படைத்த அமானிதம் இன்னும் திருப்பிப் பெறப்படாது இருப்பது எதற்கு என்னவென்று கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் தெரியாதிருப்பதாக தெரிவிக்கின்றார்கள்.
மேலும், கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் தவிசாளர் பசீர் சேகு தாவூத் முன் வைத்த கேள்விகளுக்கும் பதிலில்லை. இப்படியாக கட்சியைச் சுற்றி ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் உள்ளன. இப்பிரச்சினைகள் கட்சியின் செல்வாக்கை பாதித்துவிடுமே என்று உயர்பீட உறுப்பினர்களில் பலரும், ஆதரவாளர்களும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் வீட்டுக்கு வீடு மரம் நடுகை கட்சிக்குள் காணப்படும் இப்பிரச்சினைகளை திசை திருப்புவதற்கானதொரு மாற்று நடவடிக்கையா என்றும் எண்ண வேண்டியுள்ளது.
கட்சியின் கட்டமைப்பை சீரமைக்க வேண்டுமென்று பல தடவைகள், பல இடங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், கட்சியின் தலைவர் இது பற்றி சூளுரைத்தும் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருக்கும் பின்னணியில் வீட்டுக்கு வீடு மரம் நடும் நடவடிக்கை பற்றி தீர்மானம் எடுக்கப்பட்டு மிகக் குறுகியதொரு காலத்தில் அதனை நடைமுறைப்படுத்தியற்கு வேறு காரணிகள் இருக்குமோ என்றும் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இன்று இலங்கையில் பல அமைப்புக்கள் திட்டங்களை வரைந்து அரசசார்பற்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணத்தைப் பெற்று அதில் மோசடிகளைச் செய்து பெருந்தொகையை சுருட்டிக் கொண்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
மரநடுகை நல்லதொரு செயற்பாடாக இருந்தாலும், அதனை வெற்றிகரமாக சாதித்துக் கொள்வதற்கு கட்சிக்குள் காணப்படும் அனைத்து முரண்பாடுகளும் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கட்சிக்குள் காணப்படும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகளைப் பற்றியும் கவலை கொள்ளாது அல்லது அலட்டிக் கொள்ளாது மரநடுகை செயற்பாட்டை முன்னெடுத்தமை எங்களில் யாரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்பதாகவே இருக்கின்றது.
ஒரு அரசியல் கட்சி வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமாயின், அதன் செல்வாக்கு அதிகரிக்க வேண்டுமாயின், அக்கட்சிக்கு சிறந்த அரசியல் கொள்கை இருக்க வேண்டும். சமூகம் பற்றிய சிந்தனை இருக்க வேண்டும். கட்சியின் நிதி மற்றும் சொத்துக்களின் வருமானத்தில் வெளிப்படை தன்மை காணப்பட வேண்டும். கடசியின் கட்டமைப்பு உறுதியாக இருக்க வேண்டும். கட்சிக்குள் சிறந்த தொடர்பாடலும், ஒற்றுமையும் காணப்பட வேண்டும். தலைவர் மீது கட்சியின் முக்கிய உறுப்பினர்களிடையே நம்பிக்கைகள் காணப்பட வேண்டும். அளிக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். பதவிகள் சமூகத்திற்காக என்றிருக்க வேண்டும். சுயநலப் போக்கு இல்லாருக்க வேண்டும். கட்சியின் நடவடிக்கைகள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருப்பதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் மதிக்கப்படுவதுடன், பாராட்டிக் கௌரவிக்கப்பட வேண்டும். பணத்திற்கும், பதவிக்கும் சோரம் போகாதிருக்க வேண்டும். இவ்வாறான பண்புகளைக் கொண்ட கட்சியினால்தான் மக்கள் மத்தியில் தமக்குள்ள செல்வாக்கை பாதுகாத்துக் கொள்வதற்கும், அதிகரித்துக் கொள்வதற்கும் முடியுமாக இருக்கும். இன்று முஸ்லிம்கள் இத்தகைய பண்புகளைக் கொண்ட கட்சியை தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.
நன்றி: வீரகேசரி 14.08.2016

0 comments:
Post a Comment