ஆர் எம். ஹனீஸ்-
அக்கரைப்பற்று கடற்கரையிலிருந்து தவம் விட்டிருக்கும் அறிக்கையை
வாசிக்கும் போது சிரிப்பதா, இல்லை, தற்போதய முஸ்லிம் காங்கிரஸின் நிலமையை
நினைத்து கவலை கொள்வதா, பாடப் போனால் கிழவியும் பாடுவாளாம் என்பது போல்
அவரின் பேச்சு உள்ளது.
தவம் அவர்கள் தனது கடந்த காலத்தை மறந்து விட்டார் போல இருக்கிறது .
இல்லை, கடல் இரைச்சலில் தான் பேசியது மக்கள் காதில் விழாது என்று நினைத்து
விட்டார் போல .
இவர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த போராளி, கட்சியை
உருவாக்குவதில் தானும் காரண கர்த்தா என்ற ரீதியில் அறிக்கைகள் விடுவதும்,
உயர் பீட கூட்டங்களில் அடாவடித்தனம் பண்ணுவதும் வேடிக்கைக்கு உரியதும் ,
ஆரம்ப போராளிகளை விஷனப்படுத்தும் செயலாக உள்ளது .
முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான தனது கடந்த காலத்தை தவம் அவர்கள் தனது
ஞாபக சக்தி குறைபாடால் மறந்திருக்க கூடும். ஆனால் மக்கள் மறந்து
இருப்பார்கள் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்.
தலைவர் அஷ்ரப் மரணித்த செய்தி கேட்டு வெடில் கொழுத்தி அழகு பார்த்தவர்
என்று எல்லோராலும் வர்ணிக்க படுபவரும் , சேஹ் இஸ்ஸடீனோடு சேர்ந்து முஸ்லிம்
காங்கிரஸுக்கு எதிராக செயற்பட்டதும் , அதன் பின் அதாவுல்லாவோடு கட்சியின்
செயற்பாடுகளுக்கு சவாலாக செயற்பட்டதும், ஏன் தவம் தனது தலையில் தூக்கி
வைத்து இருக்கும் இதே தலைவர் ரவூப் ஹக்கீமே நடு வீதியில் நோன்பு திறக்க
வைத்ததும் இவர்தான் என்பதை ஹக்கீம் மறந்து இருக்கலாம். ஆனால் மக்கள் மறக்க
வில்லை. இவர் அரங்கேற்றிய அடாவடித்தனங்களுக்கு அளவே இல்லை.
மேலும் , அவர் கூறியதாவது, ரணில் பிரபாகரன் ஒப்பந்தத்தின் போது அதாவுல்லா கட்சியை விட்டு பிரிந்து கட்சியை நலிவடையச் செய்தார் ,
அப்போது தவம் அவர்களே , நீங்கள் முஸ்லிம் காங்கிரஸூடன் இருந்து கட்சியை பலப்படுத்தினீர்களா?
அப்போது தவம் அவர்களே , நீங்கள் முஸ்லிம் காங்கிரஸூடன் இருந்து கட்சியை பலப்படுத்தினீர்களா?
கட்சியை மீள கட்டியெழுப்பும் போது ரிஷாட் பிளவுபடுத்தினார் என்றீர்கள்,
அப்போதாவது கட்சியுடன், தலைவருக்கு உறுதுணையாக இருந்தீர்களா?
எப்போது தவம் அவர்களே முஸ்லிம் காங்கிரஸினுல் காலடி எடுத்து வைத்தீர்கள்?
1980 ஆண்டின் பிற்பகுதியிலா…1996 இன் பின்னரா , இல்லை, 2004 இல்
பின்னராவதா, முஸ்லிம் காங்கிரஸ் 2013 ல் ஆரம்பிக்கவில்லை என்பதை ஞாபகம்
வைத்துக் கொள்ளுங்கள்.
எதற்காக எடுத்து வைத்தீர்கள்?
முஸ்லிம் சமூகத்தின் தன்மானத்தையும், உரிமைகளையும் காக்கவா,
அக்கரைப்பற்று மக்களின் வாழ்க்கையின் சூபீட்சத்திற்காகவா, இல்லை மறைந்த
தலைவரினது நோக்கங்களையும்,குறிக்கோள்களையும் நிறைவேற்றுவதற்காகவா
கட்சிக்குள் வந்தீர்கள்,
எதனால் காலடி எடுத்து வைத்தீர்கள்?
இதே அடாவடித்தனங்களாலும், இதே சாக்கடை அரசியல் செயற்பாடுகளாலும்
அதாவுல்லா அவர்களின் மனதை கவர செயற்பட்டீர்கள், ஆனால் உரிய நேரத்தில்
உங்களுக்கு பிரதிபலன் கிடைக்கவில்லை. எதிர்த்தீர்கள், எதிர்த்து
நின்றீர்கள் , அவ்வளவுதான்.
நீங்கள் முஸ்லிம் சமூகத்தை காக்க வந்தவரும் அல்ல,
முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த வந்த போராளியும் அல்ல என்பது உங்கள் மனசாட்சிக்கும், எங்களுக்கும் நன்றாக தெரியும்.
முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த வந்த போராளியும் அல்ல என்பது உங்கள் மனசாட்சிக்கும், எங்களுக்கும் நன்றாக தெரியும்.
உங்களது இந்த அறிக்கையை இன்னும் 25 வருடத்தின் பின் விட்டிருந்தால்
அப்போது உங்களது அடாவடித்தனங்கள் மறந்து போயிருக்கலாம், புதியவர்கள்
உங்களைப்பற்றி அறியாமல் உங்களது பேச்சுக்கு தக்பீர் முழக்கமும்
கேட்டிருக்கலாம். தவம் காலத்தை சரியாக கணிக்காமல் அறிக்கையை
விட்டுவிட்டார்.
தவம் அவர்கள் தாராளமாக தலைவரின் மனதை வெற்றி கொள்வதற்க்கு ஏதாவது
செய்யலாம், தலைவரை புகழ் பாடலாம், அவருக்கு ஒத்தாசையாக இருக்கலாம், ஒத்து
ஊதலாம், கடந்த உயர் பீட கூட்டத்தில் செய்தது போன்று. யாருக்கெல்லாம் முழாம்
பூச முடியூமோ,பூசி, உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ளுங்கள், அதைவிட்டு
விட்டு, கட்சியின் ஸ்தாபக போராளி என்ற ரீதியில் விடும் அறிக்கைகளை உடன்
திருத்துங்கள்

0 comments:
Post a Comment