கடைசியாக நடைபெற்ற மு.காவின் அதியுயர்பீடக் கூட்டத்தில் ஒரு சில உயர்பீட உறுப்பினர்கள் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ.காதாின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளார்கள். இதனால், சபையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முதல் நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைமையகம் தொடர்பில் கட்சியின் தலைவர் அளித்த விளக்கத்தை தவிசாளர் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் அவர் உரையாற்ற முற்பட்ட போது அவரை பேசவிடாது ஒரு சிலர் கூச்சல் போட்டார்கள். இதனால், தவிசாளாினால் பேச முடியவில்லை.
இதனை உயர்பீட உறுப்பினர் கூட்டக் குறிப்பில் குறிப்பிடாது கட்சியின் தலைமையகம் பற்றிய கருத்தை தவிசாளர் ஏற்றுக் கொண்டதனைப் போன்று எழுதி வாசித்துள்ளார்.
இதனை உயர்பீட உறுப்பினர்கள் எதிர்த்துள்ளார்கள். பொய்யாக கூட்டக்குறிப்பு எப்படி எழுதலாமென்று கேட்டுள்ளார்கள்.
தவிசாளரை அன்று விட்டிருந்தால் பிரச்சினைகள் முடிவுக்கு வந்திருக்கும் என்று தொிவித்துள்ளார்கள்.
இதன் போது தவிசாளாிடம் விளக்கம் கேட்போம் என்று தலைவர் தொிவித்துள்ளார். இதற்கு தவிசாளாிடம் விளக்கம் கேட்பதற்கு முன்னர் உயர்பீடக் கூட்டத்தில் எப்படி நாகாிகமாக பேசுவதென்று கற்றுக் கொடுங்கள் என்று தொிவித்துள்ளார்கள்.
இக்கூட்டத்திற்கு கட்சியின் செயலாளர், தவிசாளர் ஆகியோர்கள் செல்லவில்லை. இவர்கள் இருவரும் வராத போதும் கேள்விகள் கேட்கப்பட்டமை தலைவருக்கு அதிர்வினை ஏற்படுத்தியுள்ளதாம்
0 comments:
Post a Comment