• Latest News

    September 02, 2016

    காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்: பான் கீ மூன்

    இராணுவத்தினரால் பிடித்துவைக்கப்பட்டுள்ள காணிகள், விடுவிக்கப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
    இதன்போதே இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தமது சொந்த வீடுகளுக்கு திரும்ப வாய்ப்பு ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    இந்த நிலையில் வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தினரின் அளவை குறைப்பதன் மூலம், நம்பிக்கையை கட்டியெழுப்பமுடியும்.
    அத்துடன் பதற்றத்தையும் தணிக்கமுடியும் என்றும் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.
    சமாதானம் தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர், போர் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கை பல விடயங்களை செய்துமுடித்துள்ளது.
    எனினும் மேலும் பல விடயங்களை சாதிக்கவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தாம் இலங்கைக்கு முதல் தடவையாக விஜயம் செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அன்று போரின் பாதிப்பினால் ஆயிரக்கணக்கான மக்கள், பாரிய மனிதாபிமான பிரச்சினைகளுக்கு ஆட்பட்டிருந்தனர்.
    இதனையடுத்து நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று தாம் அன்று வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவித்தார்.
    இந்த நிலையில் ஒரு வருடத்துக்கு முன்னர் பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம், குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
    அத்துடன் 19வது அரசியல்அமைப்பை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஜனநாயக நடைமுறைகளுக்கு இலங்கை அரசாங்கம் வழியேற்படுத்தியுள்ளது.
    இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்களின் இன்னும் உதவுநடவடிக்கைகளை எடுக்கமுடியும்.
    இந்த நிலையில் பிராந்தியத்திலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் இலங்கை இன்னும் தமது நிலையை தக்கவைப்பதில் முதல்படியிலேயே உள்ளதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்: பான் கீ மூன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top