யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ
மூன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இன்று மதியம் யாழ். பொதுநூலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
ஐ.நா
பொதுச்செயலருடனான சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சித்தார்த்தன்,
யோகேஸ்வரன், சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும், முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


0 comments:
Post a Comment