தமிழ்
மக்கள் தங்களை ஆளக்கூடிய வகையில் அந்த அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்ற
கோரிக்கையினை முன்வைக்கும் போது, ஹக்கீம் போன்றவர்களுக்கு அதன் அர்த்தம்
புரியாது.
ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் இவ்வாறான போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள் அல்ல.
முஸ்லிம் மக்களும் அடக்கப்பட்ட இனம், அவர்களுக்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களை நடாத்தியிருக்கின்றார்கள்.
அரசாங்கத்துடன்
இருக்கும் போது பேரம் பேசுவதும், தேவையான அமைச்சுக்களை எடுத்துக்கொள்வது
போன்றவற்றினைப் பார்த்தார்களே தவிர எதனையும் செய்யவில்லை.
தமது உரிமைகளைக் கேட்பவர்கள் இனவாதிகள் என முத்திரை குத்த
முயல்கின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஸ்
பிரேமச்சந்திரன் சுட்டிக் காட்டியுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை
இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் 'எழுக தமிழ்' பேரணியின் பின்னர்
தெற்கில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்து விளக்கமளிக்கும் போதே
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்
தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில கோரிக்கைகளை
முன்வைத்துள்ளது. வடகிழக்கு இணைப்பு, தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை
வேண்டும், தமிழ் மக்களுக்கு சமஷ்டி அரசியல் முறை வேண்டும். இவ்வாறு
கோரிக்கைகளை வைத்தவர்கள் இனவாதிகள் என்றால், சம்பந்தன் உட்பட தமிழ் தேசிய
கூட்டமைப்பில் இருப்பவர்கள் அனைவரும் இனவாதிகளா?
அதே கோரிக்கைகளை
தமிழ் மக்கள் பேரவை முன்வைக்கும் போது அவர்கள் இனவாதிகள் என்றால், பல
தசாப்த காலங்களாக அந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ள இலங்கை தமிழரசு கட்சியும்
இனவாதிகளா? வடக்கிலும் தெற்கிலும் உள்ள இனவாதிகளின் கருத்துக்களை
செவிமடுக்க முடியாது என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கூறுகின்றார்.
வடக்கில்
இருக்கக் கூடிய இனவாதிகள் யார்? வடக்கில் இருப்பவர்கள் சிங்கள மக்களின்
உரிமைகளுக்கு எதிராக யாரும் பேசவில்லை. வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ்
மக்களுக்கான உரிமைகள் பற்றிப் பேசுகின்றோம். சிறுபான்மை தேசிய இனம், தமது
உரிமைகளைக் கேட்பதை இனவாதம் என யாரும் சொல்ல முடியாது.
தெற்கில்
இருக்கும் இனவாதத்தினை சமப்படுத்துவது போன்று, வடகிழக்கில் இருக்கும் தமிழ்
அமைப்புக்கள் மீதும் அவ்வாறான முத்திரையினைக் குத்துவதற்கு
முயற்சிக்கின்றார்கள். அந்த முத்திரையைக் குத்துவதற்கு தமிழ் ஊடகங்கள் சில
துணைபோவதனையும் பார்க்க கூடியதாக இருக்கின்றது.
எனினும் ஒற்றையாட்சி என்ற பதம் இல்லாமல் பிரச்சினையினைத் தீர்க்க முடியுமென பலர் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
நீண்டகாலம்
மிக அதிகமான விலையினைக் கொடுத்து தமிழ் மக்கள் தமது உரிமைக்காகப்
போராடியவர்கள், இலட்சக்கணக்கான மக்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்து
போராடினார்கள். அந்தவகையில் தமிழ் மக்களுக்கு முழுமையான அதிகாரம் வேண்டும்.
தமிழ்
மக்கள் தங்களை ஆளக்கூடிய வகையில் அந்த அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்ற
கோரிக்கையினை முன்வைக்கும் போது, ஹக்கீம் போன்றவர்களுக்கு அதன் அர்த்தம்
புரியாது.
ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் இவ்வாறான போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள் அல்ல.
முஸ்லிம் மக்களும் அடக்கப்பட்ட இனம், அவர்களுக்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களை நடாத்தியிருக்கின்றார்கள்.
அரசாங்கத்துடன்
இருக்கும் போது பேரம் பேசுவதும், தேவையான அமைச்சுக்களை எடுத்துக்கொள்வது
போன்றவற்றினைப் பார்த்தார்களே தவிர எதனையும் செய்யவில்லை.
மேலும்
தமிழ் மக்களின் உரிமைகளைக் கூட கேட்பது தவறு என கூறுகின்றார்கள். சிங்கள
மக்களின் உரிமைகளைக் கேட்கவில்லை, சிங்கள மக்களின் நிலங்களைக் கேட்கவில்லை,
எமது வடகிழக்குப் பிரதேசங்களில் ஜனநாயக சூழல் இருக்க வேண்டும், இராணுவம்
வெளியேற வேண்டும், இராணுவம் வெளியேறினால் மாத்திரமே மக்கள் மீள்குடியேற
முடியும் என மனிதாபிமான அடிப்படையிலான கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது.
ஜனநாயக
ரீதியான கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்திருக்கின்றோமே தவிர வேறு விதமான
கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:
Post a Comment