சஹாப்தீன் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் மரணித்து கடந்த 2016.09.16ஆம் திகதியுடன் 16 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அவர் மரணித்து 16 வருடங்கள் சென்ற போதிலும் முஸ்லிம்கள் மத்தியில் இன்றும் அடிக்கடி பேசப்படும் ஒரு அரசியல் தலைவராக அஸ்ரப் திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இதற்கு அவரின் கொள்கைகளும், அவர் மீதான நம்பிக்கைகளும்தான் பிரதான காரணமாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் மரணித்து கடந்த 2016.09.16ஆம் திகதியுடன் 16 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அவர் மரணித்து 16 வருடங்கள் சென்ற போதிலும் முஸ்லிம்கள் மத்தியில் இன்றும் அடிக்கடி பேசப்படும் ஒரு அரசியல் தலைவராக அஸ்ரப் திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இதற்கு அவரின் கொள்கைகளும், அவர் மீதான நம்பிக்கைகளும்தான் பிரதான காரணமாகும்.
இன்று முஸ்லிம்கள் மத்தியில் பல கட்சிகள் உள்ளன. இக்கட்சிகளின் தலைவர்களும், முக்கிய உறுப்பினர்களும் நாங்கள் அஸ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அஸ்ரப்பின் கொள்கைகளை விமர்சனம் செய்தால் அரசியலில் நிலைத்திருக்க முடியாதென்பதற்காகவே இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று முஸ்லிம்கள் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. இக்கட்சிகள் அஸ்ரப்பின் கொள்கைகளை பின் பற்றிக் கொண்டிருப்பதாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இக்கட்சிகளின் அனைத்து நடவடிக்கைகளும் அஸ்ரப்பின் கொள்கைகளுக்கு மாற்றமாகவே இருக்கின்றன. இக்கட்சிகள் பேரினவாதிகளின் திட்டங்களுக்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பித்தலாட்டம்
ஒரு தலைவனுக்கு செய்கின்ற மிகப் பெரிய நன்றிக் கடன் அவனது கொள்கைளைப் பின்பற்றுதலாகும். ஆனால், இன்று அஸ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவர்கள், அவரது கொள்கைகளை பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் எல்லோரும் அஸ்ரப்பின் கொள்கைகளுக்கு மாற்றமாகவே நடந்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் போஸ்டர்களில் மாத்திரமே அஸ்ரப்பைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இதே வேளை, சிலர் தமது கட்சியின் இன்றைய தலைவருக்கு விசுவாசத்தைக் காட்ட வேண்டுமென்பதற்காக அஸ்ரப்பை விடவும் இன்றைய தலைவர் சிறந்தவர் என்று வார்த்தைகளை அடுக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக அஸ்ரப்பை விடவும் உயர்ந்த தலைவர் முஸ்லிம் சமூகத்தில் வர முடியாதென்று சொல்லவில்லை. அவரையும் விடவும் சிறந்த தலைவர்கள் முஸ்லிம்களிடையே இல்லையென்று எண்ணுவது எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்றவர்களின் வார்த்தையாகும். தமது சமூகத்தை குறைத்து மதிப்பீடு செய்வதற்கு சமமாகும்.
ஒரு தலைவனுக்கு செய்கின்ற மிகப் பெரிய நன்றிக் கடன் அவனது கொள்கைளைப் பின்பற்றுதலாகும். ஆனால், இன்று அஸ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவர்கள், அவரது கொள்கைகளை பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் எல்லோரும் அஸ்ரப்பின் கொள்கைகளுக்கு மாற்றமாகவே நடந்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் போஸ்டர்களில் மாத்திரமே அஸ்ரப்பைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இதே வேளை, சிலர் தமது கட்சியின் இன்றைய தலைவருக்கு விசுவாசத்தைக் காட்ட வேண்டுமென்பதற்காக அஸ்ரப்பை விடவும் இன்றைய தலைவர் சிறந்தவர் என்று வார்த்தைகளை அடுக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக அஸ்ரப்பை விடவும் உயர்ந்த தலைவர் முஸ்லிம் சமூகத்தில் வர முடியாதென்று சொல்லவில்லை. அவரையும் விடவும் சிறந்த தலைவர்கள் முஸ்லிம்களிடையே இல்லையென்று எண்ணுவது எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்றவர்களின் வார்த்தையாகும். தமது சமூகத்தை குறைத்து மதிப்பீடு செய்வதற்கு சமமாகும்.
ஆனால், இன்றைய முஸ்லிம் தலைவர்கள் யாரும் அஸ்ரப்புக்கு ஈடானவர்களில்லை. முஸ்லிம்களிடையே இன்றுள்ள கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் சமூகத்தை விடவும் பதவிகளை அதிகம் நேசிக்கின்றார்கள். தமது குடும்பத்திற்காக கட்சியின் அனைத்து செயற்பாடுகளையும் அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தாம் சொல்லுவதனை கேள்விகளுக்கு உட்படுத்தாது ஏற்றுக் கொள்கின்றவர்களுக்கு மாத்திரமே முக்கியத்துவம் அளித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமது தலைமைப் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக தம்மைச் சூழ வேலிகளை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். வாக்குறுதிகளை மீறிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியான பண்புகளைக் கொண்டுள்ள இவர்கள் அஸ்ரப்பின் கொள்கைகளில் தாங்கள் இருப்பதாக தெரிவித்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய பித்தலாட்டமாகும்.
பிரதேசவாதம்
அஸ்ரப் கட்சியை ஆரம்பித்த போது முஸ்லிம் பிரதேசங்கள் பிரதேசவாதத்தில் மூழ்கியிருந்தன. தொகுதிக்கு எம்.பி வேண்டும். ஊருக்கு எம்.பி வேண்டும். பெரிய ஊர், சிறிய ஊர் என்றெல்லாம் பிரதேசவாதம் முஸ்லிம் பிரதேசங்களை கூர்போட்டுக் கொண்டிருந்தன. அஸ்ரப்; இந்த பிரதேசவாதத்தையே முதலில் இல்லாமல் செய்தார். தொகுதி, ஊர் என்பவற்றிக்கு அப்பால் எங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒருவர் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தி பெரும்பான்மையான முஸ்லிம்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியின் கீழ் ஒற்றுமைப்படுத்தினார்.
இன்று என்றுமில்லாத வகையில் முஸ்லிம் ஊர்கள் இப்பிரதேசவாத நச்சுப் பிரளயத்தில் அமிழ்ந்து கொண்டிருக்கின்றன. தங்களின் அரசியல் இருப்புக்காக அஸ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றவர்கள்தான் இப்பிரளயத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இப்பிரதேசவாதம் முஸ்லிம்களிடைய அரசியல் ஒற்றுமை ஏற்படுவதற்கு மிகப் பெரிய தடையாக இருந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு ஊரும் பாராளுமன்ற உறுப்பினர் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றது. தலைவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை தருவதாக ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
கட்சியின் தலைவர்கள் தமது தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக முஸ்லிம் பிரதேசங்களை பிரித்தாளுகை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஊர்கள் ஒற்றுமையாக இருக்கக் கூடாதென்பதற்காக பிரதேசவாத்தை தூண்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஊர்களில் உள்ள கட்சியின் ஆதரவாளர்களிடையேயும் பிளவுகளை உருவாக்கி வைத்துள்ளார்கள். ஊர்களின் ஒற்றுமையும், ஊருக்குள் ஒற்றுமையும் இறுக்கமடைவது தமது தலைவர் பதவிக்கு ஆபத்து என்று கணித்துக் கொண்டு சமூகத்தை பிளவுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இனவாதத்தை விடவும் பிரதேசவாதம் மோசமானதாகும். பிரதேசவாதம் ஒரு இனத்திற்குள்ளேயே முரண்பாடுகளையும், சண்டைகளையும் ஏற்படுத்தும் வல்லமைக் கொண்டது.
இளைஞர்களும் அஸ்ரப்பும்
அஸ்ரப் பிரதேசவாத்தை ஒழித்துக் கட்டியதோடு, இளைஞர்களையும் கட்சியோடு இணைத்துக் கொண்டார். இளைஞர்கள் சமூகத்தின் மீதும், கட்சியின் கொள்கைகள் மீதும் பற்றுக் கொள்ளும் வகையில் செயற்பட்டார். உங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை தர மாட்டேன். ஆனால், உங்களின் எதிர்காலத்தை சுவிட்சமாக்குவேன் என்றுதான் இளைஞர்களை அழைத்தார். அன்றைய இளைஞர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் கட்சியும், தலைவனும் வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பின்னால் அணி திரண்டார்கள். அஸ்ரப்பின் பின்னால் இளைஞர்கள் அணிதிரண்டமைதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதீத வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
அஸ்ரப் பிரதேசவாத்தை ஒழித்துக் கட்டியதோடு, இளைஞர்களையும் கட்சியோடு இணைத்துக் கொண்டார். இளைஞர்கள் சமூகத்தின் மீதும், கட்சியின் கொள்கைகள் மீதும் பற்றுக் கொள்ளும் வகையில் செயற்பட்டார். உங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை தர மாட்டேன். ஆனால், உங்களின் எதிர்காலத்தை சுவிட்சமாக்குவேன் என்றுதான் இளைஞர்களை அழைத்தார். அன்றைய இளைஞர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் கட்சியும், தலைவனும் வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பின்னால் அணி திரண்டார்கள். அஸ்ரப்பின் பின்னால் இளைஞர்கள் அணிதிரண்டமைதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதீத வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
1994ஆம் ஆண்டின் பின்னர் ஆயிரக் கணக்கான இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தார். இன்று தொழில்கள் விலை பேசப்படுகின்றன. கட்சியின் ஆதரவாளர் என்பதனை விடவும் ரொக்கத்தின் பெறுமதியில்தான் தொழில் பெறுகின்றவர் தீர்மானிக்கப்படுகின்றார்.
ஆனால், இன்று முஸ்லிம் கட்சிகளுடன் இளைஞர்கள் இருக்கின்றார்களா என்று நினைக்கும் அளவிற்குத்தான் கட்சிக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான தொடர்புகள் உள்ளன. முஸ்லிம் கட்சிகள் பெரும்பாலும் வயோதிப வாக்காளர்களையே அதிகபட்ச நிரந்த ஆதரவாளர்களாக வைத்துக் கொண்டிருக்கின்றன. இளைஞர்களை கவரும் வகையில் திட்டங்களோ, கவர்ச்சிகளோ இல்லாத நிலையிலேயே முஸ்லிம் கட்சிகள் உள்ளன.
எந்தக் கட்சி இளைஞர்களின் ஆதரவை இழந்து கொண்டு போகின்றதோ அக்கட்சி மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கான முன்னறிவித்தலாகும்.
அரசியல் தீர்வு
அஸ்ரப் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அதிகாரங்கள் இனங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்றார். இனப்பிரச்சினைக்கான தீர்வு வருமாயின் அதில் முஸ்லிம்களுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். வடக்கும், கிழக்கும் நிரந்தரமாக இணைய வேண்டுமாயின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கிய நிலத் தொடர்பற்ற அதிகார அலகு வேண்டுமென்றார்.
அரசாங்கத்தோடும், தமிழ் அரசியல் கட்சிகளோடும் இனப் பிரச்சினை சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இப்பேச்சுக்களில் முஸ்லிம் சமூகத்திற்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். முஸ்லிம் சமூகத்திற்காக தாம் கேட்கும் அதிகாரங்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென்று மக்களுக்கு பொதுக் கூட்டங்களை போட்டு விளக்கமளித்தார். கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் மக்களுக்கு மறைக்காது வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
ஆனால், இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லிம்களுக்கு எத்தகைய அதிகாரங்கள் வேண்டுமென்று தெளிவுபடுத்துதில்லை. இனப் பிரச்சினை சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபட்டால் கூட அங்கு பேசப்பட்டவைகளை சமூகத்திற்கு வெளிப்படுத்துவதில்லை. அமைச்சர் பதவிகளைப் பற்றியே பேசிக் கொள்கின்றார்கள். சமூகத்தின் பொதுத் தேவைகளை கேட்பதில்லை. அரசியல் தீர்வு விடயங்களில் முஸ்லிம் கட்சிகளின் நடவடிக்கைகள் பூச்சியமாகவே இருக்கின்றன.
அபிவிருத்திகள்
அஸ்ரப் அபிவிருத்திகளை ஒரு பிரதேசத்திற்கு என்று கட்டுப்படுத்தவில்லை. அபிவிருத்தியில்; எல்லா ஊர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். நிலையான அபிவிருத்திகளை மேற்கொண்டார். அவர் உரிமை அரசியலையும், அபிவிருத்தி அரசியலையும் மேற்கொண்டார். உரிமைகளை இழந்து அபிவிருத்திகளை பெற முடியாதென்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய உரிமை அரசியலை இன்றுள்ள எந்தக் கட்சியும் மேற்கொள்ளவில்லை. இன்று எல்லா முஸ்லிம் கட்சிகளும் அபிவிருத்தி அரசியலையே மேற்கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பற்றி பேசுவதற்கு அச்சப்படும் தலைவர்களாகவே இருக்கின்றார்கள். அபிவிருத்தி மூலமாக ஒரு பிரதேசம் செழிப்படைய வேண்டுமென்பதனை விடவும், அதன் மூலமாக எவ்வளவு சம்பாதித்துக் கொள்ளலாமென்றே இன்றைய தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கணிக்கின்றார்கள். திட்டமிடப்படாத வகையில் அபிவிருத்திகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். அபிவிருத்தியில் பிரதேசவாதம் காட்டுகின்றார்கள். சிறிய கிராமங்களை புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அஸ்ரப் அரசியல் அதிகாரமற்ற சிறிய கிராமங்களின் அபிவிருத்தியில் முக்கிய கவனம் செலுத்தினார்.
சொத்துக்கள்
அஸ்ரப் அரசியலில் மிகப் பெரிய செல்வாக்கிலிருந்த போதிலும் தனது குடும்பத்திற்கு என்று சொத்துக்களை தேடவில்லை. தனக்கு கிடைத்தவற்றை எல்லாம் கட்சிக்கே சொந்தமாக்கினார். ஆனால், இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அஸ்ரப் சேர்த்து வைத்த சொத்துக்களின் தகராற்றில் சிக்கியுள்ளது. கட்சியின் சொத்துக்கள் சூரையாடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சொத்துக் குவிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளார்கள். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசியலில் வருவதற்கு முன்னர் வைத்திருந்த சொத்துக்களை விடவும் பல மடங்கு சொத்துக்களின் சொந்தக்காரர்களாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உள்ளார்கள். சொத்துக்களை குவிப்பதில் ஆர்வங் காட்டும் தலைவர் சமூகத்தை பாதுகாத்துக் கொள்ளமாட்டார். சொத்துக்கள் குவிப்பதில் ஆர்வங் காட்டிய தலைவர்கள் ஈற்றில் நாடு, மக்கள், செல்வாக்கு ஆகியவைகளை இழந்து அவமானப்பட்டுள்ளார்கள். இதனை உலக வரலாற்றில் காணலாம். இந்த உண்மையை மறந்து முஸ்லிம் அரசியல் தலைவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் பாராளுமன்றத்தில் இருப்பதற்கும், கைகளை உயர்த்துவதற்கும் விலை நிர்ணயம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு கட்சி அவசியம்
முஸ்லிம்கள் மத்தியில் இன்று வரைக்கும் அதிகபட்ச செல்வாக்கைப் பெற்ற கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. இதே வேளை, இன்று முஸ்லிம் மத்தியில் பல கட்சிகள் உள்ளன. இக்கட்சிகள் யாவும் ஒரு கூட்டமைப்பாக, ஒரு கட்சியாக சமூகத்தின் அரசியல் பலத்தை அதிகரிப்பதற்கு முன் வருதல் வேண்டும்.
அஸ்ரப் முஸ்லிம்களிடையே ஒரு கட்சிதான் இருக்க வேண்டும். வேறு கட்சிகளுக்கு ஆதரவு இருக்கக் கூடாதென்பதற்காக தேசிய கட்சிகளில் உள்ளவர்களை அவர்களின் வீடுகளுக்கு சென்று அழைத்தார். இந்த அழைப்பை பலர் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், இன்றுள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களின் நடவடிக்கைகள் கட்சிக்குள்ளேயே பல முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன. ஒரு கட்சிக்குள் முரண்பாடுகள் அதிகரிப்பது அக்கட்சிக்கும், தலைவருக்கும் ஆரோக்கியமாக இருக்காது.
ஆகவே, அஸ்ரப் எங்கள் தலைவர், அவரின் கொள்கைளை பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம், அவரின் பாசறையில் வளர்ந்தவர்கள் என்று போலியாக சொல்லிக் கொண்டிருக்காது. அஸ்ரப் மரணமடைந்து 16 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இக்காலப் பகுதியில் நாம் முஸ்லிம் சமூகத்திற்காக என்ன செய்துள்ளோம் என்று ஒவ்வொரு முஸ்லிம் அரசியல் தலைவரும் தமது மனட்சாட்சியிடம் கேட்டுக் கொள்ளல் வேண்டும். இனிவரும் காலங்கள் முக்கியமாக இருப்பதனால் முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உளத் தூய்மையுடன் செயற்படுவதற்கு மனங்களில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். குற்றங்களை ஏற்று நல்ல மாற்றத்தை நோக்கி செல்லுவதுதான் ஒரு தலைவனுக்கு அழகாகும்.
இன்று வீரகேசாியில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்
0 comments:
Post a Comment