• Latest News

    September 25, 2016

    இணைந்த வட­கி­ழக்கில் சமஷ்­டியே தீர்வு சிங்­கள மக்கள் ஏற்­க­வேண்டும் என்­கிறார் சி.வி.

    இலங்­கையின் வடக்கு கிழக்கு, தமிழ் பேசும் மக்­களின் தாயகம். அவர்­க­ளுக்குச் சுயாட்சி கொடுப்­பது காலத்தின் கட்­டா யம். இந்த நாடு சமா­தா­னத்­து­டனும் நல்­லு­ற­வு­டனும் அர­சியல், சமூக, பொரு­ளா­ தார விடிவை நோக்கிப் பய­ணிக்க விரும்­பினால் சமஷ்டி அர­சியல் முறை­யொன்றே அதற்குத் தீர்­வாக அமை­யலாம். அதனை சிங்­கள மக்கள் ஏற்க வேண்டும் என வட ­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார். யாழ்ப்­பா­ணத்தில் நேற்று சனிக்­கி­ழமை 'எழுக தமிழ்' எழுச்சிப் பேர­ணியின் ஈற் றில் நடை­பெற்ற மாபெரும் மக்கள் கூட்­டத்தில் கலந்து
    கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
    அவர் தனது உரையில் மேலும் தெரி­வித்­த­தா­வது,
     
    யாருக்கும் எதி­ரல்ல
    எழுக தமிழ் கவ­ன­யீர்ப்புப் பேர­ணி­யா­னது ஆட்­சியில் அல்­லது அதி­கா­ரத்தில் உள்ள எவ­ரையும் எதிர்த்து நடாத்­தப்­படும் பேரணி அல்ல. நாம் எமது மத்­திய அரசை எதிர்த்து இதை நடாத்­த­வில்லை! சிங்­கள சகோ­தர சகோ­த­ரி­களை எதிர்த்து நடாத்­த­வில்லை! பௌத்த சங்­கத்­தி­னரை எதிர்த்தும் நடாத்­த­வில்லை! ஏன் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியை எதிர்த்துக் கூட நடாத்­த­வில்லை. கொள்­கை­ய­ளவில் அவர்கள் எம்மை ஆத­ரித்துக் கொண்­டுதான் இருக்­கின்­றார்கள். பலர் எம்­முடன் இங்கு வந்தும் இருக்­கின்­றார்கள். அவர்கள் இச்­சந்­தர்ப்பம் சரி­யா­னதா என்­றுதான் கேட்­கின்­றார்கள். அதில் எமக்குள் கருத்து வேறு­பாடு. அவ்­வ­ள­வுதான். இது பற்றி நான் பின்னர் குறிப்­பி­டுவேன்.
     
    மக்கள் சக்தி அவ­சியம்
    இன்­றைய கால­கட்­டத்தில் பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­யப்­ப­டு­வ­தாலோ மாகா­ண­ச­பை­க­ளுக்குத் தெரி­யப்­ப­டு­வ­தாலோ எமது உரி­மை­களை நாம் வென்­றெ­டுத்துக் கொள்ள முடி­யாது . மக்கள் சக்தி எமது அர­சியல் பய­ணத்­திற்கு அவ­சியம். அத­னால்தான் தமிழ் மக்கள் பேர­வையின் இணைத்­த­லைவர் பத­வியை நான் ஏற்றேன்.
    2009ஆம் ஆண்டு மே மாத காலத்தின் அனர்த்த அழி­வு­களின் பின்­ன­ரான தமிழ் மக்­களின் விடி­வுக்­கான தீர்வு சம்­பந்­த­மாக ஏற்­க­னவே எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள் பல கூறி­யுள்­ளன. அவற்றின் அடிப்­படைக் கொள்­கை­களில் பாரிய முரண்­பா­டுகள் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. ஆகவே சில அடிப்­படைக் கொள்­கை­களை கட்­சி­களும் மக்கள் சமூ­கமும் ஏற்றுக் கொண்டால் எல்­லோரும் சேர்ந்து வேலை செய்­வது கடி­ன­மாக இருக்­காது. 2001ஆம் ஆண்டில் பல கட்­சி­களை ஒன்­று­ப­டுத்தும் 6 பேர் கொண்ட குழுவை கொழும்பில் அமைத்­த­போது சிவில் சமூகம் பெரும் பங்­காற்­றி­யது என்­பதை நாம் மறந்­து­வி­டக்­கூ­டாது.
    நான் அர­சி­யலில் அப்­போது இல்­லா­தி­ருந்தும் அவ்­வா­றான ஒருங்­கி­ணை­தலை அப்­போதே வர­வேற்றேன். மக்­களும் மக்கள் பிர­தி­நி­தி­களும் சேர்ந்­தால்தான் எங்­க­ளுக்கு மதிப்பு. ஆகவே உங்கள் ஊக்­கமும் உற்­சா­கமும் உறு­து­ணையும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு ஊட்டச் சத்­துக்­களை வழங்­கு­வன என்று நான் எதிர்­பார்க்­கின்றேன். நாம் எமது தமிழ்ப் பேசும் மக்­களின் கரி­ச­னை­களை, கவ­லை­களை ஆகக்­கூ­டி­யது எமது கண்­ட­னங்­களை வெளிப்­ப­டுத்தி விழிப்­பு­ணர்ச்­சியை ஏற்­ப­டுத்­தவே இந்தப் பேர­ணியை நடத்­தி­யுள்ளோம்.
     
    தமிழ் பேசும் மக்­களின் சந்­தேகம்
    எம் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்கள் அனை­வரும் பலத்த சந்­தே­கங்­க­ளிலும் ஐயப்­பா­டு­க­ளிலும் மனச் சஞ்­ச­லத்­திலும் இருக்­கின்­றார்கள். அவர்­களின் அந்த மனோ­நி­லையை, மனக்­கி­லே­சங்­களை, ஊர­றிய, நாட­றிய, உல­க­றிய உரத்துக் கூறவே இங்கு கூடி­யுள்ளோம்.
     
    எமது கரி­ச­னைகள் என்ன?
    பௌத்­தர்கள் வாழாத இடங்­களில் பௌத்த விகா­ரை­களும் புத்த சிலை­களும் ஏன்? எம்மை மதத்தின் ஊடாக ஆக்­கி­ர­மிக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­ற­னவா? எமது பிர­தே­சங்­களின் குடிப்­ப­ரம்­பலை மாற்­றத்தான் இவை நடை­பெ­று­கின்­ற­னவா என்­பது எமது முத­லா­வது கரி­சனை.
    சிறையில் உண்­ணா­வி­ரதம் இருக்கும் எமது இளை­ஞர்­களின் குரல்கள் எவ­ருக்கும் கேட்­கா­தது ஏன்? அவர்கள் இறந்­தாலும் பர­வா­யில்லை என்ற ஒரு காழ்ப்­பு­ணர்ச்சி எங்கோ ஒரு அதி­கார பீடத்தின் அடி மனதில் ஆழப் பதிந்­துள்­ளதா? போர் முடிந்து ஏழு வரு­டங்­களின் பின்னர் கூட கொடூ­ர­மான பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் தமிழ் அர­சியல் கைதிகள் சிறை­களில் வாடு­வது எம்மால் சகிக்க முடி­யா­த­தொன்­றாக இருக்­கின்­றது. புதிய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கீழும் 17க்கு அதி­க­மான சித்­தி­ர­வதை நட­வ­டிக்­கைகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன என்றால் எமது கூட்­டான மனோ­நி­லை­களில் மாற்­ற­மேற்­ப­ட­வில்­லையா என்று கேட்­கத்தான் தோன்­று­கின்­றது.
    காணாமல் போனோர் பற்றி இது­வரை என்ன நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன? காணாமற் போனவர் காரி­யா­லயம் காலத்தைக் கடத்தும் கரவுத் திட்­டமா? போர் முடிந்து ஏழு வரு­டங்­க­ளுக்குப் பின்­னரே இக் காரி­யா­லயம் திறக்­கப்­பட்­டுள்­ளது. அதுவும் சர்­வ­தேச நெருக்­கு­தல்­களின் கார­ண­மாக! இன்­னமும் எவ்­வ­ளவு காலம் சென்றால் படை­யி­ன­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட, சர­ண­டைந்த அல்­லது தஞ்­ச­ம­டைந்த எம் மக்கள் பற்றித் தர­வுகள் கிடைக்கப் பெறலாம்?
    போர்க்­குற்ற விசா­ரணை சம்­பந்­த­மாக இது­வரை எடுக்­கப்­பட்ட திட­மான நட­வ­டிக்­கைகள் என்ன? எம் மக்கள் குழம்பிப் போயுள்­ளார்கள். இதற்­கான விளக்­கங்­களை யார் தரு­வார்கள்?
    நாவற்­கு­ழியில், முருங்­கனில், வவு­னி­யாவில், முல்­லைத்­தீவில் பத்­தா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட சிங்­களக் குடும்­பங்கள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளன. இது எதற்­காக?
    ஏன் சிங்­கள, முஸ்லிம் மக்­களின் மீள் குடி­யேற்­றத்­திற்கு மத்­திய அமைச்­சர்­க­ளு­ட­னான ஒரு செய­லணி வேண்­டி­யி­ருக்­கின்­றது? மற்­றைய மக்­களின் மீள் குடி­யேற்­றத்­திற்கு செய­லணி வேண்­டாமா? இந்­தி­யாவில் இருந்து வரும் எமது இடம் பெயர்ந்தோர் சம்­பந்­த­மாக போதிய கவனம் செலுத்­தி­யுள்­ளோமா?
    கேர­தீவில் உப்­பளம் அமைக்க மத்­திய அர­சாங்கம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. அது பற்றி எமக்கு எது­வுமே தெரி­யாது. பாதிக்­கப்­படும் எமது மக்கள் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளனர். எம்மைப் புறக்­க­ணித்து மத்­திய அர­சாங்கம் எமது வட­மா­கா­ணத்தில் இப்­பேர்ப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு அனு­மதி வழங்­கு­வதன் சூட்­சுமம் என்ன?
    போர் முடிந்து ஏழு வரு­டங்­க­ளான பின்­னரும் இரா­ணுவம் பல ஏக்கர் நிலங்­களை ஆக்­கி­ர­மித்து வைத்துக் கொண்டு அவற்றில் பயிர் செய்து பயன்­களை அனு­ப­விப்­பதன் அர்த்தம் என்ன? உல்­லாச விடு­திகள், விவ­சாயப் பண்­ணைகள், தனியார் வாசஸ்­த­லங்கள் தொடர்ந்து படை­யி­னரின் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருப்­பதன் நியாயம் என்ன?
     
    போர்க் குற்றப் பொறி­முறை
    போர்க்­குற்றப் பொறி­முறை கலப்புப் பொறி­மு­றை­யாக இருக்க வேண்டும் என்­பது 2015ம் ஆண்டின் செப்­டெம்பர் மாத சர்­வ­தேச எதிர்­பார்ப்பு. வெளி­நாட்டு வழக்கு நடத்­துநர், வெளி­நாட்டு நீதி­ப­திகள், சர்­வ­தேச போர்க்­குற்ற சட்­டத்தை உள்­ளேற்றல் போன்­றவை இல்­லாது கலப்பு பொறி­மு­றையை நிரா­க­ரித்து மீண்டும் உள்­ளகப் பொறி­மு­றையை மட்டும் எமது நல்­லாட்சி அர­சாங்கம் நாடு­வது எமக்குச் சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளன. பாதிக்­கப்­பட்ட எமது மக்­க­ளுக்கு நீதி கிடைக்­காமற் செய்ய எடுக்­கப்­படும் முன்­னேற்­பா­டு­களா இவை என்று நாம் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.
     
    அர­சியல் யாப்பு வஞ்­சிப்பு
    தமிழ் மக்கள் அர­சியல் ரீதி­யாக வஞ்­சிக்­கப்­பட்டு வந்­துள்­ளார்கள். ஆங்­கி­லேயர் அதி­கா­ரங்­களை உள்­ளூர்­வா­சி­க­ளுக்கு வழங்கப் போகின்­றார்கள் என்று தெரிந்­ததும் 1919ஆம் ஆண்டில் இருந்தே அதி­கா­ரத்தைத் தம் கைவசம் வைத்­தி­ருக்கப் பெரும்­பான்­மை­யின மக்கள் தலை­வர்கள் கங்­கணம் கட்­டி­விட்­டார்கள். அதி­காரம் முழு­மை­யாக பெரும்­பான்­மை­யின மக்­க­ளிடம் சென்­று­விட்­டது. எமது மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்­த­போது இவ்­வ­ளவு தரு­கின்றோம், இன்னும் கொஞ்சம் தரு­கின்றோம், இவ்­வ­ளவு தான் இதற்கு மேல் எதுவும் கேட்­கப்­ப­டாது என்­றெல்லாம் பேரம் பேசி வரு­கின்­றார்கள்.
    இவ்­வ­ள­வுக்கும் தமிழ் பேசும் மக்கள் காலாதி கால­மாக 2000 வரு­டங்­க­ளுக்கு மேலாக வடக்கு கிழக்கில் பெரும்­பான்­மை­யின மக்­க­ளாக வசித்து வரு­கின்­றார்கள். இங்கு சிங்­கள மக்கள் எப்­பொ­ழுதும் வசிக்­க­வில்லை. சிங்­கள மொழி நடை­மு­றைக்கு வந்­ததே கி.பி. ஆறாம் நூற்­றாண்­ட­ளவில். தமிழ் மக்கள் பௌத்­தர்­க­ளாக சில நூறு வருட காலம் மாறி­யி­ருந்­த­மையே பௌத்த மத எச்­சங்கள் வடக்குக் கிழக்கில் காணப்­ப­டு­வ­தற்கு காரணம். அப்­ப­டி­யி­ருந்தும் எம்மை வந்­தேறு குடிகள் என்றும் வடக்குக் கிழக்கில் சிங்­கள மக்கள் முன்னர் வாழ்ந்­தார்கள் என்றும் அவர்கள் விரட்­டப்­பட்டு விட்­டனர் என்றும் புதிய சரித்­தி­ரத்தை வேண்­டு­மென்றே எழுதத் தொடங்­கி­விட்­டனர். தாம் எழு­திய புதிய சரித்­தி­ரத்தின் அடிப்­ப­டை­யி­லேயே இவ்­வ­ளவு தரு­கின்றோம் இன்னும் கொஞ்சம் தரு­கின்றோம் என்று பேரம் பேசத் துணிந்­துள்­ளார்கள்.
     
    சமஷ்­டியே முடிவு
    இலங்­கையின் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பேசும் மக்­களின் தாயகம். அவர்­க­ளுக்குச் சுயாட்சி கொடுப்­பது காலத்தின் கட்­டாயம். இந்த நாடு சமா­தா­னத்­து­டனும் நல்­லு­ற­வு­டனும் அர­சியல், சமூக, பொரு­ளா­தார விடிவை நோக்கிப் பய­ணிக்க விரும்­பினால் சமஷ்டி அர­சியல் முறை­யொன்றே அதற்குத் தீர்­வாக அமை­யலாம். இதில் கட்­சி­களும் மக்­களும் உறு­தி­யாக இருக்­கின்­றனர். ஒற்­றை­யாட்­சி­யா­னது அதி­கா­ரங்­களைத் தொடர்ந்து பெரும்­பான்­மை­யின மக்­களின் கைக­ளி­லேயே தேக்கி வைக்கச் செய்யும். தமிழ்ப் பேசும் மக்­களும் சிங்­கள மொழி பேசும் மக்­களும் சுமு­க­மாக சம அந்­தஸ்­துடன் நல்­லு­ற­வுடன் இனி­யா­வது வாழ்­வ­தானால் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்கு அவர்­களின் சுய­நிர்­ணய உரி­மையை மதித்து சுயாட்சி வழங்­கு­வதே ஒரே வழி.
     
    வடக்கு, கிழக்கு இணைப்பு
    ஆங்­கி­லேயர் காலத்தில் ஆங்­கி­லமே ஆட்சி மொழி­யாக இருந்­தது. தமிழ், சிங்­கள மொழிகள் இரண்­டுக்கும் சம அந்­தஸ்து அளிக்­கப்­பட்டு வந்­தது. ஆங்­கி­லே­ய­ரிடம் இருந்து நாடு எமக்குக் கைமா­றி­யதும் பெரும்­பான்­மை­யினர் சிங்­களம் மட்டும் சட்­டத்தைக் கொண்டு வந்து சிங்­கள மொழியின் ஆதிக்­கத்தை நாடு பூரா­கவும் திணித்­தனர். முழு நாடும் சிங்­கள பௌத்த நாடே என்ற சரித்­திர ரீதி­யாக ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­மு­டி­யாத கருத்தை அதன் பின் வெளி­விட்­டனர். ஆகவே சிங்­கள மொழி­யையும் பௌத்த மதத்­தையும் பௌத்த சிங்­க­ளவர் மிகக் குறை­வாக வாழும் பிர­தே­சங்­களில் கட்­டா­ய­மாகத் திணிக்­கக்­கூடும் என்ற பயம் எமக்கு இருக்­கின்­றது. அந்த வழி­யில்த்தான் அண்மைக் கால நட­வ­டிக்­கைகள் தெற்­கி­லி­ருந்து முடுக்கி விடப்பட்டுள்ளன. இது 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்த பின்னரே கூர்மம் பெற்று வருகின்றது.
    திணிப்பை ஏற்க முடியாது
    திடீரென்று ஒரு அரசியல் யாப்பைத் தமிழ்ப் பேசும் மக்கள் மீது திணிப்பதை நாம் ஏற்க மறுக்கின்றோம். சிங்கள மக்கள் எதிர்க்கக் கூடும் என்பதற்காக எங்கள் உரிமைகளை எந்த அரசாங்கமும் சிதைக்க முயற்சிக்கக் கூடாது. 18 தடவைகள் சென்ற அரசாங்கம் இருந்த காலத்தில் பல கலந்துரையாடல்கள் இரகசியமாக தமிழ் மக்கள் தலைவர்களுக்கும் அப்போதைய அரசாங்கத்திற்குமிடையில் நடைபெற்றன. அவை பற்றி எதனையும் எவரும் வெளியிடவில்லை. அரசியல் யாப்புக்களினால் பாதிக்கப்படப் போகும் மக்கள் நாங்களே. எங்கள் கருத்துக்களைச் செவிமடுக்காவிடில் எமது இனத்தின் அவலங்கள், ஐயங்கள், அனர்த்தங்கள் தொடர்ந்தே செல்வன.
    ஆகவேதான் இந்தப் பேரணி மூலமாக தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த கரிசனைகளை நாம் வெளிக் கொண்டு வரும் விதத்தில் இந்தப் பேரணியை கட்சி பேதமின்றி நடைமுறைப்படுத்தியுள்ளோம் என்றார்.- 
    Virakesari - 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இணைந்த வட­கி­ழக்கில் சமஷ்­டியே தீர்வு சிங்­கள மக்கள் ஏற்­க­வேண்டும் என்­கிறார் சி.வி. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top