சஹாப்தீன்
அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திலுள்ள நிந்தவூர் கல்விக் கோட்டத்தில் நிந்தவூர் கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையைச் சேர்ந்த மாணிவிகள் 17 பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தியடைந்துள்ளார்கள். நிந்தவூர் கல்விக் கோட்டத்தில் ஒரு பாடசாலை ஒரு தடவையில் 17 பேர் சித்தியடைந்துள்ளமை இதுவே முதற் தடவையாகும்.

இந்த வரலாற்றுச் சாதனையை படைத்த மாணவிகளை நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மாஸ் பவுண்டேஸன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான எம்.ஏ.எம்.தாஹிர் (அஸ்ரப்) இன்று காலை பாடசாலைக்கு நேரடியாக வருகை தந்து மாணவிகளையும், ஆசிாியர்களையும், அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர்களை பாராட்டிக் கௌரவித்ததோடு, பாிசுகளையும் வழங்கி வைத்தார்.
இப்பாடசாலையைச் சேர்ந்த மாணவி எம். ஹானி ஹம்தா 181 புள்ளிகளைப் பெற்று நிந்தவூர் கோட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

0 comments:
Post a Comment